பயத்தை விட விசுவாசம்மாதிரி

யோசேப்பின் உலகமே ஒரு நொடியிலே மாறிப்போனது. சில வார்த்தைகள் போதுமானது – அவன் கனவு கண்டிருந்த மரியாளுடனான எதிர்காலம் சாத்தியமற்றதாகத் தோன்றியது. அனைவருக்கும் நல்லது என்று நினைத்து, அமைதியாக நிச்சயதார்த்தத்தை முடித்து விலகிக்கொள்ள முடிவு செய்தான். ஆனால் தேவனின் திட்டத்தில், ஒரு திருமணம், ஒரு குழந்தை, ஒரு எதிர்காலம் இருந்தது – யோசேப்புக்கு அது இன்னும் புரியவில்லை. ஒரு கனவில், தேவன் அவனுக்குத் தேவையானதைத் தந்தார் – உறுதிப்பாடும் அடுத்த அடியை எடுக்கத் துணிவும்.
கவனியுங்கள்: யோசேப்பின் கீழ்ப்படிதல் அவன் சூழ்நிலையை மாற்றவில்லை. இன்னும் கிசுகிசுக்கள் இருந்தன, சங்கடமான அமைதிகள், சந்தேகங்கள், தவறான புரிதல்கள், உடைந்த உறவுகள் இருந்தன. அவன் சொன்ன “ஆமாம்” அவனை நிம்மதிக்குள் அழைக்கவில்லை, நிராகரிப்பிலிருந்து விடுவிக்கவில்லை. ஆனால் அது அவனை தேவனின் சமுகத்தை ஆழமாக உணரும் இடத்துக்குக் கொண்டு வந்தது. தேவனுக்கு “ஆமாம்” சொல்வது எப்போதும் நம் சூழ்நிலையை மாற்றாது அல்லது பிரச்சினையை தீர்க்காது – ஆனால் அது நம்மை அவர்மேல் இன்னும் நெருக்கமான சார்புக்கு அழைக்கும்.
யோசேப்பைப் போல, நாமும் ஒருநாள் நம்முடைய திட்டங்கள் சிதறிப் போகும் தருணங்களைச் சந்திப்போம். பிறர் நம்மை தவறாகப் புரிந்து கொள்வார்கள் என்ற பயம், விரக்தி, குழப்பம் ஆகியவற்றோடு போராடுவோம். அத்தகைய தருணங்களில், நாமே தீர்வைத் தேட முயற்சிப்போம் – பாதுகாப்பான, சாதாரண வழியைத் தேர்ந்தெடுக்க முயல்வோம். ஆனால் பல நேரங்களில், பயமும் விசுவாசமும், கட்டுப்பாடும் சரணாகதியும் சந்திக்கும் இடத்தில்தான், தேவன் நம்மை அவர்மேல் இன்னும் நம்பச் சொல்கிறார்.
யோசேப்பின் கதை நமக்கு நினைவூட்டுவது – பாதை எளிதாக இருப்பதால் நாம் கீழ்ப்படிவதில்லை. இந்த வாக்குத்தத்தம் உண்மையானது என்பதற்காகத்தான் கீழ்ப்படிகிறோம் – அது எந்தப் பயத்தையும் விட பலமாகவும், எந்தத் தயக்கத்தையும் விட உறுதியானதாகவும் இருக்கிறது:
தேவன் நம்மோடு இருக்கிறார்.
சிந்தனை: இப்போது தேவன் உங்களிடம் அதிக செலவாகும் ஒன்றில் அவர்மேல் நம்பிக்கை வைக்கச் சொல்லுகிறாரா? இன்று, விசுவாசத்தில் அடுத்த படி எடுப்பது எப்படி இருக்கும்?
ஜெபம்: தேவனே, என் வாழ்க்கையில் உமது சந்நிதியின் வாக்குத்தத்தத்திற்கு நான் நன்றியுள்ளவன். உமக்கு “ஆமாம்” சொல்வது எனக்கு விலை கொடுக்க வேண்டியதாக இருந்தாலும், நீர் அனைத்திற்கும் மதிப்புடையவர் என்பதை நினைவூட்டும். பாதை தெளிவாக இல்லாதபோதும் உம்மை நம்பச் செய். முடிவுகளில் அல்ல, உமது சந்நிதியில் அமைதியைப் பெறச் செய்.
ஆமேன்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

ஆட்வென்ட் காலம் நம்முடைய இதயங்களை இயேசுவின் வருகைக்காக தயாரhக ,Uf;f அழைக்கிறது. அது வெறும் கொண்டாட்டத்துடன் மட்டுமல்ல, ஆழ்ந்த சிந்தனையுடனும் இருக்க வேண்டும். கிறிஸ்துமஸ் கதையில், பயம் மீண்டும் மீண்டும் தோன்றுகிறது — ஆலயத்தில், கனவுகளில், மலைச்சரிவுகளில், அமைதியான வீடுகளில். ஆனால் ஒவ்வொரு முறையும், தேவன் தீர்ப்புடன் அல்ல, நம்பிக்கையளிக்கும் வார்த்தையுடன் பதிலளித்தார்: “அஞ்சாதிருங்கள்.” இந்தக் குறுகிய தியானத் தொடர், பயத்திற்குப் பதிலாக விசுவாசத்தைத் தேர்ந்தெடுப்பது எவ்வாறு இயேசுவை நம் வாழ்க்கையில் ஆழமாக வரவேற்க உதவுகிறது என்பதைக் கண்டறியச் செய்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்கிய The Salvation Army International க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: sar.my/spirituallife
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஒரு சீஷனாக இருப்பது எப்படி

கவலைப்படாதீர்கள் சந்தோஷமாய் இருங்கள் – பிலிப்பியர் 4:6-7

சத்தியம் மறுரூபப்படுத்தும்

வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுபவரை சந்தியுங்கள்

நம்மில் தேவனின் தொடர்ச்சியான வேலை

ஆண்டவர் தமது கரத்தால் உங்களை பிடிக்க அனுமதியுங்கள்

குற்ற உணர்வுப் பாதை - குற்ற உணர்வுப் பயணத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய நேரம்

உங்கள் வாழ்க்கையை தேவனின் நோக்கத்துடன் சீரமைத்தல்

சங்கீதம் 25 ன் வாயிலாக ஜெபியுங்கள், மனந்திரும்புங்கள், ஆராதியுங்கள் மற்றும் தேவனிடத்தில் உங்கள் இருதயத்தை ஊற்றிவிடுங்கள்
