சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

சங்கீதம் 23:6 வசனத்தில் – நாம் - என்னுடைய ”சில நாட்களில்” அல்லது ”நல்ல நாட்களில்” என்று திருத்திவிடக்கூடாது என்பதற்காகவே – இந்த வார்த்தைகளை எழுதிய பரிசுத்த ஆவியானவர் ”என் ஜீவனுள்ள நாளெல்லாம்” என்ற வரியை சேர்த்துள்ளார்.
சத்தியம்: நமக்கு நன்றாக தெரியும் சங்கீதம் 23ஐ- தாவீது எழுதினார் என்று; இதில் அவருடைய பங்கு – எழுதுவதற்கு எழுத்தாணி எப்படி பயன்படும் என்பது போன்ற பங்கு தான்….
II தீமோத்தேயு 3:16 ல் நாம் கற்றுக்கொள்வது போல – ”வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் (தேவாஅவியானவரால்) அருளப்பட்டிருக்கிறது” என்பதிலிருந்து இந்த சங்கீதம் 23:6 ஐ எழுதிய பரிசுத்த ஆவியானவர் - இன்றைக்கும் நம்மோடு இருக்கின்றார். நமக்கு விளக்கம் தருகின்றார்; நம்மோடு பேசுகின்றார்.
<நாம் யார்>உபாகமம் 4:7 ல் நம்முடைய தேவனாகியகர்த்தரைநாம் தொழுதுகொள்ளுகிறபோதெல்லாம், தேவனை சமீபமாய்ப் பெற்றிருக்கிறவர்கள். நாம் பாக்கியசாலிகள்.
நமது நல்லநாட்கள், கவலையுறும்நாட்கள், எனது நம்பிக்கையெல்லாம் அற்று போயிற்று என்ற நாட்களிலும் கூட - நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும் என்பதை உள்வாங்கிக் கொள்ளுங்கள்.
சத்தியம்: நன்மை, கிருபை என்ற கருத்து - ஏதோ உங்களை ஆற்ற வேண்டுமே என்றோ அல்லது திருப்திபடுத்த வேண்டுமே என்று சொல்லப்படும் நல்வார்த்தைகள் அல்ல. இவை இரண்டும் வலிமை வாய்ந்த படைகள். உங்களை சுற்றி பாதுகாக்கும் அரண்போன்றவை.
நீங்கள் இதுநாள் வரை எத்தனையோ உணர்ச்சிவயப்படுத்தும் பேச்சுகளை [PEPTALK] ஊக்கப்படுத்தும், உற்சாகப்படுத்தும் பேச்சுக்களை [MOTIVATIONAL SPEECH] கேட்டிருக்கலாம் ; வாசித்திருக்கலாம். அந்த பேச்சை பேசினவர்கள், எழுதினவர்கள் உங்களோடு இருக்கவே- முடியாது.
ஆனால், அவைகளிலெல்லாம் தேவனுடைய வார்த்தை- பரிசுத்த வேதாகமத்தின் வார்த்தைகள் வேறுபட்டது; வேதவாக்கியம் -தேவவார்த்தையின் – பரிசுத்த வேதாகமத்தின் ஆசிரியர் – உங்களோடு இன்றைக்கும் என்றைக்கும் சதாகாலத்திலும் உயிரோடுஇருக்கும் – கர்த்தராகிய இயேசு.
அவருடைய வீட்டில் நிலைத்திருக்கும் [ETERNAL LIFE] ஆசீர்வாதத்தை அவரை விசுவாசிக்கு உங்களுக்கு தருகின்றார்.
இந்த விழிப்புணர்வுடன் அனுதினமும் நீங்கள் வாழும் போது - என் ஜீவனுள்ள நாளெல்லாம் - நன்மையும் கிருபையும் நிச்சயம்....என்னைப் பின்தொடரும் என்று உரத்த சத்தமாய், தைரியத்துடன் சொல்ல முடியும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
