சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 2 நாள்

<நாம் வாழும் உலகம் நம்மை ஓடிக்கொண்டே இரு; ஒன்னுமே இல்லைன்னாலும் அரைச்சுக் கொண்டே இரு; இளைப்பாறாதே – என்று சொல்வது உலகம்>

தேவன் தமது [விஷயங்களை ஆழமாக உணரும் =அனாதி] - ஞானத்தால் செய்வது - நம்மை புல்லுள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்கின்றார் - இளைப்பாறு என்கின்றார். இரகசியம்: தேவன் என் தேவைகளை சந்திப்பார் என்ற விசுவாசத்தை அஸ்திபாரமாகக் கொண்ட பரிபூரண மனநிலைக்குள் நடத்துகின்றார்.

உலகம் போராடிக்கொண்டே இரு என்று கூறும் ஆனால், தேவன் தரும் இளைப்பாறுதலில் நாம் நம்முடைய சொந்த முயற்சியினால் தக்கவைப்பது என்று இருக்காது; அதேவேளையில், செயலற்றத் தன்மையும் காணப்படுவதில்லை.

அதிகமாக நாம் உலகம் என் தாகத்தை தீர்க்கும் என்று எதிர்பார்த்து செல்வது எல்லாம் - நம்மை சுட்டெரிக்கும் வெயிலில் தாகத்தோடு நிற்க வைத்திடும். இரகசியம்: தேவன் தரும் புல்லுள்ள தரைகளில் “நிரப்புதலைப்” பெற்றுக் கொள்கிறோம். தேவன் அவர் - உங்கள் பெலனை எப்படியாக புதுப்பிகின்றார்; உங்கள் சிந்தையை எப்படியாக மறுரூபமாக்குகின்றார் என்பதை கவனியுங்கள்.

குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே- தேவன் நிறைவாக்கும் அமர்ந்த-தண்ணீர் நம் தாகம் தீர்ப்பது நிச்சயம்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d