சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

நம்முடைய குயவன்கை-களிமண் வாழ்க்கை – மென்மையான பூக்கள் மீது நடப்பது போன்றது அல்ல. ஏனென்றால், குயவன் வனைந்து அதின்படி நாம் வாழ-பழகும் போது பாதை கடினமாகி-சில தியாகங்களைச் செய்ய வேண்டியதிருக்கும்; அப்படிப்பட்ட வேளைகளில் -நாம் நினைவில் நிச்சயம் நிறுத்த வேண்டியது - இந்த பாதையில் நடப்பது பாரமனது அல்ல; ஆசீர்வாதமானது. இது நம்மை சுற்றி போடப்படும் முள்வேலி இல்லை – நாம் செய்யவேண்டியது எல்லாம் - ”தேவனுடைய வழியை – நமது சொந்த வழியைக்காட்டிலும் மேலானது என்று தெரிந்தெடுக்க வேண்டும்”. இந்த சத்தியம் - நம்மை நெருங்கி நிற்கும் பாவத்தில் இருந்து நம்மை விடுவிக்கும்.
மரண பள்ளத்தாக்கின்...இருளில் நடந்தாலும் நான் பயப்படேன் –என பயத்தைப்பார்த்து தைரியமாக தாவீது பேசுவதற்கு காரணம் -தேவரீர் என்னோடே கூட இருக்கிறீர் என்ற நிச்சயம். உடன் தேவனுடைய பராமரிப்பு, பாதுகாப்பு - (கோல்- ஆடுகளுக்கு இலையை பறித்து தரும்) (தடி – ஆடுகளத் தாக்கவரும் சத்துருக்களினின்று - பாதுகாக்கும் என்ற நிச்சயம்.
சத்தியம்: இன்றைக்கு நாம் தாவீதைக்காட்டிலும் அதிக நிச்சயத்துடன் ”மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும்”என்று ஆணையிடலாம், அறிக்கைசெய்யலாம்.[DECREE AND DECLARE]. நமக்கு இருக்கும் போதுமான ஆதாரம் -யோவான் 3:16:-
“தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்ற சத்தியம்.
இந்த சத்தியம் நம்மை மரணபயத்திலிருந்து -விடுவிக்கும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
