சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 3 நாள்

சோர்வுற்ற நமது ஆத்துமா [உள்மனம்] அவரது கரத்தினால் புதுமையாக்கப்படுவதையே “தேற்றி” என தாவீது கூறுகின்றார். இது ஒருமுறை நிகழும் சம்பவமல்ல. மாறாக, தொடர்ச்சியாக நடைபெறும் பயணம். இயேசு- நமது கடந்த காலத்தின் உடைந்த பகுதிகளை எடுத்து புதுப்பிக்கிறார்.

அது ஒட்டப்பட்டு கீறல்கள், வடுக்களுடன் புதுப்பிக்கப்பட்டது அல்ல, மாறாக, நாம்-அவருக்கு புதுப்பிக்க இடமளித்தால் - மறுரூபம் ஆக்கப்பட்டதாக–– மறுரூபம் பெறும்.

இந்த “உள்ளிருந்து வெளியே” புதுப்பிக்கப்படும் அனுபவத்தை நான் பெற அனுதினமும் நம் சுயத்தை அவரிடம் சரணடைய செய்வதனால் தான் ஆகும். சுயம்- கிறிஸ்தவன் ஆகமுடியாது; கிறிஸ்து+அவன் என்பதால் மட்டுமே கிறிஸ்தவன் ஆக முடியும்.

உடன் தாவீது தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார் என்கிறார் இதன் அர்த்தம்.....இந்த நீதியின் பாதை சுலபமானது அல்ல. மாம்சம் விரும்புவதை செய்வதும் சுயத்தை பெருமைபடுத்துவதும்-இந்த பாதை அல்ல. நமக்கு - இது ஒரு பயணம். இதில் பயணிக்கும் போது நம்முடைய வார்த்தைகள் அல்ல; நமது நடத்தை [CONDUCT] அதிகம் பேசும்.

  1. இது எரேமியா 18:4 கூறும் -குயவன்-கை களிமண்வாழ்க்கை –குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போயிற்று; அப்பொழுது அதைத் திருத்தமாய்ச் செய்யும்படிக்கு, தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி குயவன் அதைத் திரும்ப வேறேபாண்டமாக வனைந்தான். இதுவே நீதியின் பாதையின் பயணம்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d