சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

சங்கீதம் 23:1 ல் மறைந்து இருக்கும் இரகசியத்தை நாம் வெளியே கொண்டுவந்தால்- எதையும்பெரிதுபடுத்தாது - அறிவார்ந்த முறையில் சிக்கல்கள் மற்றும் முடிவுகள் குறித்துச் சிந்திக்கும் ஆற்றல் கிடைக்கும். நாம் கொண்டிருக்கும் அணுகுமுறை மாறும்.
இரகசியம்: இந்த வரர்த்தைகள் நமக்கு ஆறுதல் தருபவை என்பதற்கும் மேலாக- நமது வாழ்க்கையின் - ”ஒவ்வொரு அங்குல (INCH)” சதுரத்தையும் - தெய்வீக பாதுகாப்புக்குள்- அவருடைய வழிகாட்டுதலுக்குள் -கொண்டுவர வேண்டும் என்பதே.
- கர்த்தர்-தாமே நம் மேய்ப்பராயிருந்து- நம்மோடு கூட நடக்க ”தெரிந்தெடுத்துக் கொண்டார்”. எனவே நாம் எவ்வளவு தூரம் தொலைந்து போனதாக ”உணர்ந்தாலும்”, ”திகைத்து நின்று கொண்டிருந்தாலும்” -
- நாம் தனிமையில் இல்லை; - நம்மோடுகூட சகலத்தையும் அறிந்த, சர்வவல்ல, சர்வவியாபியான - கர்த்தர் [கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அப்.16:31] இருந்து ஞானமாக என்னை வழிநடத்துகின்றார்- என்பதன் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்வது.
அவருடைய வழிகாட்டுதல்,ஆளுமை, கட்டுப்பாடு இவற்றை நாம் ஏற்றுக்கொள்ளும் போது, நாம் போகும் வழி கரடுமுரடாக. நிச்சயமற்றதாக இருக்கலாம் – ஆனால், நாம் பாடும் பாட்டு: வழி நடத்தும் வல்ல தேவன்-வாழ்வில் நாயகனே வாழ்வில் நாயகனே நம் தாழ்வில் நாயகனே;
அன்றன்றுள்ள தேவை தந்து ஆதரிப்பாரே- நான் தாழ்ச்சி அடையேன் என்பதே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!
More
இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவர் சர்வவல்லவர்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்
