சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்மாதிரி

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

6 ல் 5 நாள்

எரேமியா 18:4ல் நாம் காண்பது போல - களிமண்ணை- குயவன் -தன் பார்வைக்குச் சரியாய்க் கண்டபடி-அதைத் திரும்ப-வேறேபாண்டமாக வனையும் போது என்ன நடக்கின்றது:-

நம்முடைய ஆத்துமா-புதுப்பிக்கப்படுகிறது; நமது ஆவியிலே நம்பிக்கை மற்றும் மகிழ்வைப் பெற்றுக்கொள்கிறோம்.

சத்தியம்: அனுதினமும் நம் சுயம் ”தனது தோல்வியை ஒப்புக்கொண்டு”
- தேவனுடைய வழிகளில் நடக்கும் போது - தேவதயவைப் பெற்றுக் கொள்கின்றோம்.

தேவதயவின் போது - தாவீது சொல்வது போல –நாம் விழவேண்டும் என நினைக்கும் நமது சத்துருக்களுக்கு முன்பாக ஒருபந்தியை சர்வவல்லதேவன் ஆயத்தப்படுத்துவார். இது அவருடைய பரிபூரண ஆசீர்வாதத்திற்கு சாட்சியாக இருக்கின்றது.

உங்களுக்கு சத்துருக்களே இல்லை என்றால் தான் தேவன் ஆசீர்வதிப்பேன் என்று சொல்லவில்லை-அவர்களுக்கு முன்பாக உங்களை செல்வசெழிப்பாக்க என்னால் முடியும் என்பதே- அவர் சத்துருக்களுக்கு முன்பாக நமக்கு பந்தியை ஆயத்தப்படுத்துவதன் அர்த்தம்......

சத்தியம்: நீ அழைக்கப்பட்டவன்; தெரிந்தெடுக்கப்பட்டன்; இந்த ஆசீருக்காக நியமிக்கப்பட்டவன் என்பதை - நம் மீது குறிக்கும்படி தேவன் எண்ணையால் அபிஷேக்கின்றார்.

இந்த அபிஷேகம்- தேவதயவை உங்கள் வாழ்வில் நிறைந்தோடிடச் செய்யும்;

இந்த சத்தியத்தை புரிந்துகொண்டால் –

இனி நீங்கள் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் [STEP], விடும் ஒவ்வொரு மூச்சுகாற்றும் [BREATH] - தேவனின் அளவில்லா தயை என் மீது அபிஷேகமாக இருக்கின்றபடியால்- என்பாத்திரம் நிரம்பி வழிகின்றது என்ற சத்தியத்தை -நமது முகப்பொலிவு [COUNTENANCE] மற்றவர்களுக்கு வெளிப்படுத்தும்.

இந்த திட்டத்தைப் பற்றி

சங்கீதம்-23ல் மறைந்துள்ள ”இரகசியம்” - சகோதரன் சித்தார்த்தன்

கர்த்தர் என் மேய்ப்பராய் ... என்று நான் ஆரம்பிக்கும் போதே இந்த வாக்கியத்தை - உங்கள் உதடு முழுவதும் சொல்லி முடித்திருக்கும் என்பதை நான் அறிவேன். தாவீது சொன்ன இந்த வாக்கியத்திற்குள் ஓர் இரகசியம் இருக்கின்றது; அந்த இரகசியம் -உங்கள் வாழ்க்கையை மறுரூபம் [TRANSFORM] ஆக்கும் என்று நான் சொன்னால் – ”இனிமேல் என்மனசுக்கு கஷ்டமா இருந்தா - சங்கீதம்23 ஐ எடுத்து வாசிப்பேன்”, என்று இல்லாமல் - எப்படி வாழ்க்கையை இனி நடத்துவீர்கள் என்பதை மாற்றி அமைக்கும் ஒரு வெளிப்படுத்தலை -இந்த சங்கீதம் நமக்கு தரும். இன்றைக்கு உங்கள் முன்பாக நிற்கின்ற ”கோலியாத்” தான் என்ன? <இந்த சவாலை நான் எப்படி சந்திப்பேன்? சமாதானத்தைத் தேடி அலைபவரா நீங்கள்? இதில் எனக்கு யார் ஐயா வழிகாட்டி [guide], வழிநடத்துவார்கள் [lead] என்ற கேள்வியா?> இந்த சங்கீதத்தின் வார்த்தைகளில் இருக்கும் ”வாழ்க்கையை புரட்டி போடும் சத்தியங்களை” நாம் இந்த வேதாகம திட்டத்தின் -மூலம் உள்வாங்கிக் கொள்ளலாம் - வாருங்கள்!

More

இந்த திட்டத்தை வழங்கிய Anchor Ministries க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.bible.com/organizations/36ac5974-dac1-4d19-82b1-3a0fa597751d
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்