இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

பேதுரு மிகவும் சுவராசியமான நபர். நினைவில் வைத்திருக்க வேண்டிய இயேசுவின் சீடராவார். அவர் இயேசு தண்ணீரில் நடப்பதைப் பார்த்தார். நானும் இணைந்து கொள்ளட்டுமா என்று கேட்டார். இது அசாதாரணமான ஒரு வேண்டுகோள் ஆகும். இயேசு அவரை வா என்று அழைத்தார். பேதுரு கீழ்ப்படிந்தபோது சில நொடி நேரம் தண்ணீரின் மேல் நடந்தார். சுற்றிலும் பார்த்தபோது சீறும் புயலைக் கண்டபோது விழுந்தார். மூழ்கும் நிலையில் இருந்த பேதுருவை நோக்கி இயேசு தன் கைகளை நீட்டி பிடித்து மென்மையாகக் கடிந்து கொண்டார். பேதுருவிடம் இயேசு கேட்ட கேள்வியானது இன்றும் நாம் நம்மிடம் கேட்டுக் கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்கிறது. சந்தேகமும் பயமும் நமது விசுவாசத்தைவிட்டு நாம் தடம் புறண்டு போவதற்கும்,கடவுளின் வல்லமையைக் குறைத்து மதிப்பிடுவதற்கும் என்றே எதிரியானவன் பயன்படுத்தும் ஆயுதங்கள் ஆகும்.பிரச்சனைகளும் பாடுகளும் நம்மைச் சூழ்ந்திருக்கும்போது சில நேரங்களில் மீட்பரைவிட பிரச்சனைகளின் மீதே கவனத்தை செலுத்துவது எளிதாக நடக்கிறது.சந்தேகமும் பயமும் உங்களைச் சூழிந்திருக்கும் நிலையில்கடவுளை வேண்டுமென்றே உற்று நோக்கி உதவி கேட்கும் நேரம் இப்போது உங்களுக்கு வந்திருக்கலாம்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
இப்போது எனக்கு இருக்கும் மிகப்பெரிய பயம் என்ன?
இயேசுவின் பாதத்தில் நான் கொண்டு வரவேண்டிய கடவுளைப் பற்றிய எனது சந்தேகங்கள் யாவை?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

வனாந்தர அதிசயம்

மேடைகள் vs தூண்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ஆண்டவருடைய கணக்கு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்
