இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

ஒருவர் வெளியே நின்று கொண்டிருக்கும் அவரது தாய் மற்றும் சகோதரர்களைப் பற்றி இயேசுவின் கவனத்தைத் திரும்புகிறார். இயேசு அந்த எளிய நேரத்தைக் கூட கடவுளின் அரசைப் பற்றி தன்னைச் சுற்றி இருப்பவர்களுக்குக் கற்றுக் கொடுக்கும் வாய்ப்பாக மாற்றிக் கொண்டார். அந்த நபரிடம் அவர் சொன்னார், “பரலோகத்தில் இருக்கும் தன் பிதாவின் சித்தத்தைச் செய்பவர்களே தனது தாயும் சகோதரர்களுமாக இருக்கிறார்கள்” (அவரது சீடர்களைப் போல).நாம் அவரைப் பின்பற்றி அவர் மீது நம் விசுவாசத்தை வைக்கும்போது,நாம் அவரது குடும்பத்துக்குள் தத்து எடுக்கப்பட்டுவிடுகிறோம். நாம் இப்போது கிறிஸ்துவுடன் உடன் சுந்தந்தரராகிறோம் (பவுல் சொல்வது போல).இப்போது நாம் கடவுளின் மகள்களாகவும் மகன்களாகவும் மாறுகிறோம். அவர் ஒவ்வொரு விசுவாசியையும் பிள்ளை என்னும் நிலைக்கு உயர்த்துகிறார். இது நமக்குப் பெரும் பாக்கியங்களையும் பெரும் பொறுப்புகளையும் கொண்டுவருகிறது. கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு இருக்கும் பாக்கியங்களில் சில,நேரடியாக அவருடன் உறவு கொள்வதும் நித்தியகாலமாக நமக்கு இருக்கும் சுதந்தரமுமாகும். நமக்கு இருக்கும் பொறுப்புகளில் சில,பாடுகள் நம்மில் செயல்பட்டு முடித்து தினமும் பரிசுத்த ஆவியானவரால் நாம் நிரப்பப்பட்டு அவரால் புதுப்பிக்கப்பட வேண்டும்.இதன் மூலம் அவருக்கு மகிமையைக் கொண்டுவர வேண்டும்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
கடவுளின் குடும்பத்தில் ஒரு பகுதியாக இருப்பதால் நான் காணும் பாக்கியங்கள் யாவை?
கடவுளின் பிள்ளையாக இருந்து நான் தவிர்த்த பொறுப்புகள் யாவை?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

ஆண்டவருடைய கணக்கு
