இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

கானான் தேசத்தில் இருந்து வந்த ஒரு புறஜாதிப் பெண்ணானவர் யூத குலத்தினர் புரிந்து கொள்ளத் துவங்குவதற்கு பல காலத்துக்கு முன்பாகவே கிருபை என்ற கருத்தை நன்றாகப் புரிந்திருந்தார். இயேசு அவரை அவமானப்படுத்துவதற்காகச் சொல்லவில்லை,அது கடினமான,அக்கறையில்லாத சொல்லாகத் தெரிந்தாலும்,அவர் அந்தப் பெண் தெளிவாகத் தன் விசுவாசத்தை வெளிப்படுத்தும் விதத்தைல் அவரது விசுவாசத்தைத் தூண்டிவிட்டார். இந்த வெளிப்படுத்தலில் இயேசு பிள்ளைகளுக்கு என்று வைக்கப்பட்டிருக்கும் உணவை நாய்களுக்குப் போடுவது என்று சொன்னபோது,நாய்கள் தன் எஜமானின் மேசையிலிருந்து விழும் துணிக்கைகளை சாப்பிடுமே என்றார் அந்தப் பெண்மணி. இயேசுவை எஜமானனாகவும்,அவருக்குத் தகுதி இல்லை என்றாலும் அவர் அதைக் கொடுப்பார் என்றும் அவர் பெற்றிருந்த இந்த புரிதல் இயேசுவை உடனடியாக அந்தப் பெண்மணிக்காக செயல்பட வைத்தது.
பல நேரங்களில் நாம் எதற்காகக் கேட்கிறோம் என்று தெரியாமலேயே கடவுளிடம் பலவற்றைக் கேட்கிறோம். அல்லது தவறான நோக்கங்களுக்காகக் கேட்கிறோம். இப்படிப்பட்ட வார்த்தைகளின் மூலமாகத் தான் நாம் உண்மையிலேயே எதை விசுவாசிக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறோம். கடவுளின் வல்லமை,பிரசன்னம் மற்றும் திட்டங்களைப் பற்றி நமக்கு இருக்கும் சந்தேகங்கள் நமக்குப் புரிகின்றன. அவரது அன்பை,மன்னிப்பை,சுகமாக்குதலை நாம் எந்த அளவுக்கு சார்ந்திருக்கிறோம்,அதற்கு எந்த அளவுக்கு நாம் தகுதி இல்லாதவர்களாக இருக்கிறோம் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
மற்றவர்களுடன் என் விசுவாசத்தைப் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாகும்போது நான் எப்படி என் விசுவாசத்தை சிறப்பாக வார்த்தைகளில் வெளிப்படுத்த முடியும்?
இயேசு என் எஜமானனாக இருக்கிறாரா?நான் அவருக்கு சேவை செய்கிறேனா,அல்லது அவர் எனக்கு சேவை செய்ய வேண்டுமா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆண்டவருடைய கணக்கு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

வனாந்தர அதிசயம்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

மேடைகள் vs தூண்கள்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது
