இயேசுவுடன் முகமுகமாகமாதிரி

இயேசு யார் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?உங்கள் பதிலானது உங்களுக்கும் கடவுளுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பற்றி அதிகம் சொல்லக்கூடியதாக இருக்கிறது. ஏனென்றால் எல்லாவற்றையும் கூட்டிக் கழித்துப் பார்த்தால்,கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மதத்தைத் தாண்டி உறவு சார்ந்ததாக இருக்கிறது. இயேசு மனித உருவத்தில் உலகத்துக்கு வந்தது கடவுளுக்கும் மனிதனுக்குமான இடைவெளியை நித்தியத்துக்கும் இணைத்தது. மிக மோசமான பாவிக்குக் கூடத் தன் தகப்பனை அவர் நெருங்குவதற்கு வழி செய்தார். அவர்கள் தங்கள் பாவத்துக்கு மனம் வருந்தி அவரை விசுவாசித்து அவரது பெயரை அழைத்தால் போதுமானது. இயேசு சொன்னது போல அழைக்கப்பட்டவர்கள் அனேகர்,ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ சிலர். அதாவது,இந்த முழு உலகமும் கிறிஸ்துவை அறிந்து கொள்ளக்கொடுக்கப்படும் அழைப்பையும் விருப்பத்துடன் அவரைப் பின்பற்றி அவர் சொல்வதைச் செய்யும் தேர்ந்தெடுப்பைச் செய்வார்கள். இந்த இழுப்புவிசையானது இருந்து கொண்டே இருக்கும்.
தான் யாரை விசுவாசிக்கிறார் என்பதை பேதுரு அறிந்திருந்தார்,அந்த அறிவானது அவரைத் தனது வாழ்வின் இறுதிப்பகுதியில் நடத்திச் சென்றது. அவர் தைரியமாகவும் வல்லமையோடும் யூதர்களின் உலகம் முழுவதிலும் நற்செய்தியைப் பரப்பினார்.
உங்களுக்கு நீங்களே கேட்டுக்கொள்ள கேள்விகள்:
நீங்கள் இயேசுவை யார் என்று சொல்கிறீர்கள்?
நீங்கள் உங்கள் உறவில் வளருவதாக உணருகிறீர்களா?இல்லை என்றால் அதைப் பற்றி நீங்கள் ஏன் அதிகம் சிந்திக்கக் கூடாது?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

லெந்து காலமானது நம்முடனும் நமக்குள்ளும் வசிக்கும் நித்தியமான கர்த்தரைப் பற்றிய உண்மைகளைக் கொண்டு நம்மைப் புதுப்பித்துக் கொள்வதற்கான சிறந்த காலமாகும். இந்த வேதபாடத் திட்டத்தின் மூலம் நாற்பது நாட்களும், தினசரி சில நிமிடங்களாவது கர்த்தரின் வார்த்தையுடன் செலவிடுவீர்கள் என்று நம்புகிறோம். முற்றிலும் புதிய ஒரு நிலையில் இயேசுவை அறிந்து உணரும் ஒரு திசைகாட்டியாக இதைப் பயன்படுத்துவீர்கள் என நம்புகிறோம்.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்கு We Are Zion நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://www.instagram.com/wearezion.in/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

வனாந்தர அதிசயம்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு

பகுத்தறிய கற்றுக்கொள்ளுங்கள்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவருடைய கணக்கு
