திட்ட விவரம்

கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 1 நாள்

ஞானமுள்ள வார்த்தை.இன்றைய வசனங்களைப் படியுங்கள்.எந்தவொரு பிறப்பிட காட்சியையும் பாருங்கள், அந்த மாட்டு தொழுவத்திற்கு பொருத்தமே இல்லாத ஒரு சில கதாபாத்திரங்களை நீங்கள் காணலாம்: சாஸ்திரிகள். அப்படி காண நாம் பழகி விட்டோம். ஆனால் நீங்கள் அக்காட்சியை உற்று பார்த்தால், அவர்களின் ஆடம்பரமான உடைகள் மற்றும் விசேஷமான பரிசுபொருட்களோடு அந்த காட்சிக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாதது போலிருக்கும்.ஆனால் என்னைப் பொருத்தவரை அவர்கள் கிறிஸ்துமஸ் கதையின் வசீகரமான மனிதர்கள். அவர்களைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அவர்கள் யாரென்றோ, எங்கிருந்து வந்தார்களென்றோ தெரியாது. வேதம் இவர்களை "மகி" என்றழைக்கிறது. மகி எனப்படுபவர்கள் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள், மற்றும் வான சாஸ்திரிகளின் சேர்க்கை ஆகும். அவர்கள் செல்வந்தராயும், மெத்த படித்தவர்களுமாய் இருந்தார்கள்.ஆனால் அவர்கள் ஞானவான்கள் என்று நாம் அறிவோம். இன்னும் சொல்லப் போனால் இந்த கிறிஸ்துமஸ் கதையில் அவர்கள் காட்டிய மதிநுட்பங்களின் மூலம் நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம்.இந்த சாஸ்திரிகள் கற்றுக் கொடுத்த மற்ற படிப்பினைகளுக்குள், சத்தியத்தை மட்டுமே நாம் தேட வேண்டுமென்று கற்றுக் கொள்கிறோம். ஞானவான்களை, ஊகத்தின் மூலமாகவும் அனுமானத்தின் மூலமாகவும் சொல்லப்படுகின்ற காரியங்களால் சந்தோஷப்படுத்தி விட முடியாது. அவர்கள் "யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே?" என்றார்கள் (மத்தேயு 2:2).அந்த ஞானவான்கள் இயேசுவைத் தேடினார்கள். இன்றும் ஞானவான்கள் அவரைத் தேடுகிறார்கள்.சத்தியத்தைப் பொருத்த வரையில் இரண்டு வகையான மக்கள் உள்ளனர்: ஊகிப்பவர்களும் தேடுபவர்களும் ஆவர். ஊகிப்பவர்கள் சத்தியத்தைப பற்றி அனுமானிக்கிறார்கள். அவர்கள் தேவன் எப்படி இருப்பார் என்று தங்களுக்குத் தெரியுமென்று நினைக்கிறார்கள்.ஊகிப்பவர்கள் தேவனைப் பற்றி விமரிசிப்பார்கள்; மற்றும் விவாதிப்பார்கள், ஆனால் அவர்களுக்கு சத்தியம் தெரியாததால் ஊகிக்கிறார்கள். அவரைப் பற்றிப் பேச ஆசைப்படுகிறார்கள்.ஆனால், நேரம் செலவிட்டு சத்தியத்தை தேடுபவர்களை கர்த்தர் நேசிக்கிறார். தேடுபவர்கள் நான்கு காரியம் செய்கிறார்கள்:• அவர்கள் கேள்விகள் கேட்கிறார்கள்.

• அவர்கள் வாசிக்கிறார்கள்.

• அவர்கள் தங்களைச் சுற்றி நடப்பவற்றை கவனிக்கிறார்கள்.

• அவர்கள் எப்படியாகிலும் விடையைக் கண்டுபிடிக்கிறார்கள்.தங்களிடமுள்ள அனைத்தையும் பிரயோகித்து இயேசுவைத் தேடுகிறார்கள். கர்த்தர் தேடுபவர்களை நேசிக்கிறார். வேதாகமம் கூறுகிறது: "உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் கர்த்தரைத் தேடும்போது, அவரைக் கண்டடைவாய்." (உபாகமம் 4:29)நீங்கள் உண்மையான ஆர்வத்துடன் சத்தியத்தை தேடுவீர்களானால் அதைத் தவற விட மாட்டீர்கள்.கர்த்தர் உங்களைத் தவற விட மாட்டார்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை க...

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்