திட்ட விவரம்

கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 4 நாள்

இயேசுவையும் விட முக்கியமான அலுவல்களில் மும்முரமா?



வாசியுங்கள் லூக்கா 2:7



ஒரு வருடம், எங்கள் பிள்ளைகளின் இளம்பிராயத்தில் விடுமுறைக்கு எங்கே செல்வதென்பதை நான்தான் முடிவு செய்யவேண்டும் என்பதாக என் மனைவி முடிவு செய்தாள். ஒரு போதகரும் மூப்பருமாகிய எனக்கு, என் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் விடுமுறையை நானே திட்டமிடுவதென்பது ஒரு உல்லாசமான காரியமாய் எனக்குப் படவில்லை!



திருமணமாகி, குழந்தைகளுடன் தன்னிச்சையான திடீர் விடுமுறைக்கு செல்வது சரியான விஷயமாய் என் மனதுக்கு தோன்றவில்லை. எந்த திட்டமிடுதலும் இல்லாமல் முதல் ஐந்து இரவுகள், ஐந்து வெவ்வேறு நகரங்களில் எந்த விடுதியிலும் இடம் கிடைக்காமல், நான்கு இரவுகள் எங்கள் காரிலேயே தூங்கினோம். எங்கள் பிள்ளைகளுக்கு இதை சந்தோஷமாக அனுபவிக்கவில்லை. ஐந்தாவது இரவு, நாங்கள் முன்கூட்டியே திட்டமிட முடிவு செய்தோம்.



முதல் கிறிஸ்துமஸ் அன்று மேரிக்கும் யோசேப்புக்கும் "தங்குவதற்கு இடமில்லை" என்று வேதாகமத்தில் வரும் அந்த பகுதியை புரிந்துகொள்ள அந்த விடுமுறை உதவிற்று.



நித்திய தேவனும் மெய்யான மேசியாவின் வருகையையும் பல்லாயிரம் வருடங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்திருந்தது. இவ்வுலகின் இரட்சகரின் வரப் போகிறதை தீர்க்கதரிசிகள் தீர்க்கதரிசனமாய் சொன்னார்கள். கி.பி, கி.மு என்று வரலாறையே பிரிக்கும் விதமாக அவருடைய பிறப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருக்கும். உங்களுடைய பிறந்த நாளும், அவர் பிறந்த தினத்தை பொருத்தே கணக்கிடப்படுகிறது.



ஆனாலும், தேவகுமாரன் இவ்வுலகிற்குள் வந்தபோது அவருக்கு இடமில்லாமற்போனது. அந்த விடுதியின் சொந்தக்காரர் ஒரு அருமையான சந்தர்ப்பத்தை தவறவிட்டு விட்டார். இயேசுகிறிஸ்து மட்டும் அந்த விடுதியின் ஏதாவதொரு ஒரு அறையில் பிறந்திருப்பாரேயானால் அந்த விடுதியின் சொந்தக்காரர் விடுதிக்கு வெளியே ஒரு பெரிய பலகையில் அம்புக்குறியிட்டு " தேவகுமாரன் இங்கேதான் பிறந்தார்" என்று எழுதி வைத்து, அறை வாடகையை பல மடங்கு உயர்த்தியிருக்க முடியும். ஆனால் இயேசுவுக்கு இடம் கொடுக்காமல் போனதால் ஒரு பெரிய ஆசீர்வாதத்தை தவறவிட்டு விட்டார்.



விடுதியின் சொந்தக்காரர் மேல் நாம் மனவருத்தம் கொள்ள முடியாது. நாமே எப்போதும் அதைத்தான் செய்கிறோம்.



நம் வாழ்க்கையில் அவருக்குரிய முக்கியத்துவத்தை கொடுப்பதை எதிர்க்கிறோம். ஆண்டவரைவிட முக்கிமான அலுவல்கள் இருப்பதுபோல நம் அட்டவணையை நிரப்பிக் கொள்கிறோம். புத்தம்புதிய சாதனங்களை வாங்க பணத்தை செலவிடுகிறோம், ஆனால் உலகெங்கும் நடக்கும் ஆண்டவரின் காரியங்களுக்கு நம்மிடம் பணம் இருப்பது இல்லை. வாழ்க்கையில் முன்னேறுவதற்கு பலவிதமான காரியங்களை செய்யும் நாம், நம்மை சுற்றி உள்ளவர்களுக்கோ, நம் ஆலயத்திற்கோ அல்லது சமுகத்திற்கோ உதவி செய்ய நேரம் இருப்பதில்லை.



இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு உங்களை ஆயத்தம் செய்ய ஆரம்பிக்கும் வேளையில், இந்த ஒரு கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: உங்கள் விடுதியில் இயேசுவுக்கு இடம் இருக்கிறதா?

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை க...

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்