திட்ட விவரம்

கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 5 நாள்

உங்கள் அலுவல்களின் நடுவில் இயேசுவை தவறவிட்டு விடாதிருங்கள்



யோவான் 4: 10-ஐ வாசியுங்கள்.



இந்த கணப்பொழுதில் தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைகள் உங்களைச் சுற்றி இருக்கிறது. நீங்கள் அந்த அலைகளைப் பெற்று கொள்ளகூடிய மின்குமிழை வைத்திருந்தால், அந்த அலைகளில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்கலாம். ஆனால், நீங்கள் அவற்றைப் பார்க்க முடியாததால், அவைகள் மெய்யானதல்ல என்று அர்த்தம் இல்லை. நீங்கள்தான் அந்த குமிழுடன் ஒத்திசைக்கவில்லை.



பெத்லகேமில் அந்த முதல் கிறிஸ்துமஸ் இரவில் இதைப்போல்தான் இருந்தது. பெத்லகேமில் பிரயாணிகளை கவனித்துக்கொள்வதற்கென்றே, பிரத்தியேகமான நோக்கத்துடன் அந்த விடுதி இருந்த போதிலும், பெத்லகேமில் சந்தேகத்திற்கிடமின்றி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த அந்த குடும்பத்தினருக்கு அந்த இரவு, அந்த விடுதியின் எந்த அறையிலும் இடமில்லை.



இந்த கிறிஸ்துமஸ், இச்சம்பவத்திற்கு இணையான, நம் இதயத்தின் அருகே ஒரு காரியத்தை நாம் மறக்க வேண்டாம். உங்கள் இதயம் ஆண்டவர் தங்குவதற்கென்றே படைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஆண்டவரால், ஆண்டவருக்கென்றே சிருஷ்டிக்கப்பட்டவர்கள். அதை நீங்கள் புரிந்துகொள்ளாதவரை, வாழ்க்கையை புரிந்துகொள்ளவே முடியாது. துரதிர்ஷ்டவசமாக, மற்ற உலக காரியங்களால் நம் வாழ்க்கையை நிரப்பிக் கொள்கிறோம். மற்ற விருந்தாளிகளை நம் வீடுகளுக்கு அழைக்கிறோம். நம் இதயம் பல வித எண்ணங்களாலும், கவர்ச்சிகளினாலும், பொறுப்புகளினாலும், ஆசாபாசங்களினாலும் நிரம்பி விடுகிறது.



நம் வாழ்க்கை பலவித காரியங்களினால் நிரம்பியிருப்பதால், இயேசு நம் அருகில் வரும்பொழுது நம்மால் அதை உணரக்கூட முடியவில்லை. ஆண்டவர் நம் வாழ்க்கையில் நம் பிரச்சனைகளுக்கு மத்தியிலும் தொடர்ந்து, நமக்கு கிடைக்காது என்று நினைத்துகொண்டிருந்த கிடைக்கபெறா வாய்ப்புகளை வாய்க்கச் செய்தும் தம்மைக் காண்பிக்கிறார். பலநேரம், நாம்தான் அவரைக் கண்டுகொள்வதில்லை.



வேதத்தில், இதைபோன்றே பல நேரங்களில் சம்பவித்திருக்கிறது. இயேசு திடீரென்று தோன்றி தம்மை யாரென்றே உணராத மக்களிடம் பேசுவார்.

யோவான் எழுதிய நிருபத்தில், ஒரு கிணற்றின் அருகில் இயேசு உட்கார்ந்திருந்த போது, நீர் இரைக்க ஒரு பெண் அங்கு வந்தாள். அவளுக்கு இயேசுவை யாரென்று தெரியவில்லை. உள்ளபடியே அவள் தேவகுமாரனுடன் மதவாத தர்க்கம் செய்தாள்! இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக, "நீ தேவனுடைய ஈவையும், தாகத்துக்குத்தா என்று உன்னிடத்தில் கேட்கிறவர் இன்னார் என்பதையும் அறிந்திருந்தாயானால், நீயே அவரிடத்தில் கேட்டிருப்பாய், அவர் உனக்கு ஜீவத்தண்ணீரைக் கொடுத்திருப்பார் என்றார்". (யோவான் 4:10) ஆனால் அந்தப் பெண் இயேசுவைக் கண்டுணரவில்லை.



ஆண்டவர் உங்களை சுற்றிலும் காரியங்களை செய்து கொண்டேயிருக்கிறார் - கிறிஸ்துமஸின்போது மட்டுமல்ல, வருட முழுவதும். நீங்களோ அல்லது உங்களை சார்ந்தவர்களோ அவரை தவறவிடும் சாத்தியம் உண்டா?

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை க...

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்