திட்ட விவரம்

கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 8 நாள்

சிறந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்.

இன்றைய வசனங்களைப் படியுங்கள்.



நான் ஒரு குழந்தையாக இருந்தபோது, ​​என் அம்மா எனக்கு இடியாப்பத்தைக் கொடுத்தாள். நான், இதுதான் இருப்பதிலேயே சிறந்த உணவு என்று நினைத்தேன்! பின்னர் நான் இடையீட்டு ரொட்டியைக் கண்டுபிடித்தேன். நான் நல்ல வாழ்க்கையிலிருந்து சிறந்த வாழ்க்கைக்கு சென்றேன். இடியாப்பம் நன்றாகவே இருந்தது, ஆனால் வாய் ஊற செய்யும் இடையீட்டு ரொட்டிஉருவாக்கு இன்னும் மிகவும் நன்றாகவே இருக்கிறது.



உங்களுக்கு இப்போது நல்ல வாழ்க்கை அமைந்திருப்பதாக நீங்கள் நினைக்கலாம், ஆனால் நீங்கள் இன்னும் சிறப்பாக வாழ முடியுமென்றால், அதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பமாட்டீர்களா?



துரதிர்ஷ்டவசமாக, நமக்கு எல்லாம் இருப்பது போலவும் நாம் தன்னிறைவு அடைந்துவிட்டது போலவும் ஏற்படும் ஒரு முரண்பாடான எண்ணத்தினால், சிறப்பான வாழ்க்கை நமக்கு கிடைப்பதில்லை. நாம் இருக்கும்வண்ணம் நன்றாகவே உள்ளோம் என்று நினைத்துக்கொள்கிறோம்.



சங்கீதம் 10: 4 இவ்வாறு கூறுகிறது: "துன்மார்க்கன் தன் கர்வத்தினால் தேவனைத் தேடான்; அவன் நினைவுகளெல்லாம் தேவன் இல்லை என்பதே".



முதலாம் கிறிஸ்துமஸ் கதையில் (லூக்கா 2) வரும் சத்திரத்து சொந்தக்காரை போல, நமக்கு மேலும் விருந்தாளிகள் தேவை என்பதை நாம் நம்புவதில்லை. நமக்கு தேவையான அனைத்தையும் நாம் கொண்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறோம்.



அந்த இறுமாப்பில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது: ஆண்டவர் உங்களை உருவாக்கிய காரணத்தையே நீங்கள் அறியத் தவறி விட்டீர்கள். நீங்கள் அவருடன் உறவுகொள்ளும்படி ஆண்டவர் உங்களை உண்டாக்கினார். உங்கள் உண்மையான பெலனான ஆண்டவரோடு நீங்கள் நெருங்கி உறவாடாவிட்டால், அவர் உங்களுக்கென்று வைத்திருக்கும் உங்கள் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட, அந்த மிக பெரிய திட்டத்தை உங்களால் சாதிக்க முடியாமலே போய்விடும்.



ஆனால் நற்செய்தி என்னவென்றால், இப்போதும் தாமதமாகிவிடவில்லை. உங்களின் கடந்த காலத்தில் என்ன நடந்திருந்தாலும் சரி, முன்பு நீங்கள் அவரை எத்தனை முறை நிராகரித்திருந்தாலும் சரி அவருடன் நீங்கள் மீண்டும் உறவை புதுப்பித்துக் கொள்ளலாம்.



ஆண்டவர், இதை எளிதாக்கியுள்ளார். யாவரும் புரிந்துகொள்ளும்படி மூன்றே வார்த்தைகளில் சொல்லலாம்: அவரை உள்ளே அழையுங்கள்.



இயேசு சொன்னார், "இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்" (வெளிப்படுத்தல் 3:20).



இயேசு உங்கள் கதவைத் தட்டுகிறார். சிறந்த வாழ்க்கை வேண்டுமென்றால், உங்கள் வாழ்க்கையினுள் அவரை அழையுங்கள். உங்கள் வாழ்க்கையின் தலைவராக அவரை ஆக்கிக்கொள்ளுங்கள்.



அது எல்லாவற்றையும் மாற்றும்.
நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை க...

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்