திட்ட விவரம்

கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 9 நாள்

இன்றைய வசனங்களை வாசியுங்கள்.



கிறிஸ்துமஸின் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், இந்த வருடம் விளக்குகளையும், தோரணங்களையும் அலங்காரம் செய்யாமல் இருப்பதே நலம். கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வாங்குவதை மறந்துவிடுங்கள். கிருஸ்துமஸுக்கு தயார் செய்யும் சிறப்பு உணவுகளையும் மறந்து விடுங்கள்.



எதற்காக கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், அந்த கொண்டாட்டங்களில் அர்த்தமே இருக்காது.



கிறிஸ்துமஸின் நோக்கத்தை புரிந்துகொள்ள, மாட்டுத்தொழுவம், கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள், மற்றும் ஆடு மேய்ப்பர்- இவற்றையெல்லாம் தாண்டி நீங்கள் பின்னோக்கி செல்லவேண்டும். முதலாம் கிறிஸ்துமஸின்போது, இயேசு இப்பூமிக்கு தான் வந்த நோக்கத்தை நமக்கு வெளிப்படுத்தினார். "இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன் வந்திருக்கிறார் என்றார்" (லூக்கா 19:10).



எளிமையாய் சொல்வதானால், ஆண்டவர் இல்லாமல் தொலைந்து போனவர்களாய் ஜனங்கள் காணப்பட்டதால், இயேசு இப்பூமிக்கு வந்தார். ஆண்டவரிடமிருந்து,தொடர்பற்று, விலகி, பாதை மாறிப்போய் இருப்பீர்களென்றால், ஆவிக்குரிய வாழ்க்கையில் தொலைந்து போய் விட்டீர்கள் என்று அர்த்தம். இயேசு இல்லாவிட்டால் இப்பூமியில் எல்லோரும் தொலைந்துபோனவர்களே - எவ்வளவு அந்தஸ்து, பணம், புகழ் இருந்தாலும் சரி.



நம் தொலைந்து போகுதல், நம் வாழ்க்கையில் தீவிர பின்விளைவுகளை ஏற்படுத்தும். இயேசு ஏன் இப்பூமிக்கு வந்தார் என்பதை அறிந்துகொள்ள, முதலில் தொலைந்து போகுதல் என்றால் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஆண்டவர் இல்லாததால் இவற்றையெல்லாம் நாம் தொலைத்தோம்:



• நம் பாதை. நம்முடைய இந்த வாழ்க்கையில் நாம் செல்ல வேண்டிய பாதை என்ன, நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை அறிந்துகொள்ளக்கூடிய அறிவு ஒரு வரம்புக்கு உட்பட்டே இருக்கிறது.

• அவரின் பாதுகாப்பு. ஆண்டவரின் பாதுகாப்பில் நாம் இல்லாதபோது நாம் தனியாக இருக்கிறோம். பலரின் மன அழுத்தத்திற்கு இதுவே பிரதான காரணம். ஆண்டவரை தவிர்த்து, தங்களுடைய சுயபலத்தினாலும், பாதுகாப்பினாலும் வாழ முயற்சிக்கிறார்கள்.

• நம் ஆற்றல். நாம் ஆண்டவரோடு நல்ல உறவில் இல்லாவிட்டால், நம்மில் இருக்கும் ஆற்றல்களிலும்,தாலந்துகளிலும் பாதியை கூட நாம் கண்டுணர முடியாது.

• நம் சந்தோஷங்கள். இவுலகிலேயே மிகவும் பணம் உடையவர்களயாயும், பலம் வாய்ந்தவர்களாயும் நாம் இருந்தாலும், ஆண்டவர் இல்லாவிட்டால் நாம் உண்மையான சந்தோஷத்தை காண முடியாது.

• பரலோகத்தில் நம் வீடு: இங்கே இப்பூமியில் கலகம் புரியவும், எதிர்ப்பை காட்டவும் ஆண்டவர் நம்மை அனுமதிக்கிறார், ஆனால் பரலோகத்தில் கிளர்ச்சி இல்லை.



ஆனால் தொலைந்து போன ஒருவர் கூட, ஒரு துளி மதிப்பை ஆண்டவரிடம் இழக்கவில்லை.ஆண்டவரிடம் உங்களுக்கு எந்த உறவும் இல்லாவிட்டாலும், அவருக்கு நீங்கள் விலைமதிப்பு மிக்கவரே. தொலைதலில் மதிப்பு உணரப்படுகிறது. தொலைந்துபோன ஒரு பொருளை எப்பாடுபட்டாவது ஒருவர் தேடி கண்டுபிடிக்கும்தான், அந்த பொருள் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது என்று புரிகிறது.



வேதத்திலேயே புகழ்பெற்ற ஒரு வசனத்தின் மூலம் ஆண்டவர் நம் மதிப்பை விளக்குகிறார்."தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்"(யோவான் 3:16).



நற்செய்தி என்னவென்றால், ஆண்டவர் நம்மை மிகவும் நேசித்ததினால், முதல் கிருஸ்துமஸ் அன்று, நாம் கெட்டுபோகாமல் காப்பற்றப்படும்படிக்கு தன் ஒரே பேரான குமாரனை இப்பூமிக்கு அனுப்பினார். இந்த ஒரு காரணத்துக்காகவே நாம் கொண்டாடலாமே!

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை க...

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்