திட்ட விவரம்

கிறிஸ்துமஸ் நம்பிக்கைமாதிரி

The Hope Of Christmas

10 ல் 2 நாள்

இயேசுவைத் தேடும் பயணம் தகுதியுடையதே



மத்தேயு 2:1 ஐ வாசியுங்கள்.



சத்தியத்தைத் தேடுவது ஒரு பகுதி நேர வேலை அல்ல. உங்களின் அனைத்தும் தேவைப்படும். சாஸ்திரிகள் கிறிஸ்துமஸ் கதையில் நமக்கு இதை கற்றுத் தருகிறார்கள்.



சாஸ்திரிகள் சத்தியத்தை கண்டுபிடிக்க என்னவாயினும் செய்ய விருப்பமாய் இருந்தார்கள். ஏரோது ராஜாவின் நாட்களில் யூதேயாவிலுள்ள பெத்லகேமிலே இயேசு பிறந்தபொழுது, கிழக்கிலிருந்து சாஸ்திரிகள் எருசலேமுக்கு வந்தார்கள் என்று மத்தேயு 2:1 கூறுகிறது. இந்த ஞானிகள் இயேசுவைக் கண்டுகொள்ள வெகுவாகப் பணம் செலவிட்டு தூர கிழக்கிலிருந்து மத்திய கிழக்குக்கு பயணம் செய்தார்கள் என்று நாம் அனுமானிக்கலாம்.



இயேசு எருசலேமிலிருந்து ஆறு மைல் தொலைவில் உள்ள பெத்லகேமில் பிறந்தார். அந்த கால கட்டத்தில் மதவாரியான தலைநகராக எருசலேம் இருந்தது. எல்லா வித மத செயல்பாடுகளும் அங்கு நடைபெற்று வந்தன. பெரும்பாலான மதத்தலைவர்களும் எருசலேமில் இருந்தாலும் எவருமே இயேசுவைத் தேடவில்லை. வித்தியாசமான கலாச்சாரத்திலிருந்து வந்த வெளிநாட்டவரான சாஸ்திரிகள் தான் இயேசுவைத் தேடினார்கள்.



ஏரோது ராஜாவும் குழந்தையான இயேசுவைத் தவற விட்டான். வணிகரும் அப்படியே! நீங்களும் கூட அப்படித்தான், இயேசு உங்கள் மத்தியில் இருந்தாலும்கூட அவரை நீங்கள் தேடாவிட்டால் தவற விட்டு விடுவீர்கள்.



ஆனால் அந்த சாஸ்திரிகளோ இயேசுவைத் தேடினார்கள். அவர்கள் வெகுவெப்பமான பாலைவனத்தின் வழியாக நான்கைந்து மாதங்கள் பயணம் செய்து இயேசுவைத் தேட விருப்பமாய் இருந்தார்கள். அவர்கள் கர்த்தரைத் தேடும்படிக் கருத்தூன்றி இருந்தார்கள். அவர்கள் இயேசுவைக் கண்டுகொள்ள என்னவாயினும் செய்ய விருப்பமாய் இருந்தார்கள்.



அதுதான் ஞானம். நாம் செய்ய வேண்டியதும் அதுவே. நாம் கர்த்தரைத் தேடுவதில் எதுவும் குறுக்கிடக் கூடாது. உலகில் அதிமுக்கிய சாதனை அதுதான்.



பரலோகராஜ்யம் நமக்குண்டான எல்லாவற்றையும் விற்று, பெற்றுக் கொள்ளக்கூடிய விலையுயர்ந்த முத்தைப் போன்றது, என்று இயேசு சொன்னார். கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் இயேசு இந்த உவமையைக் கூறுவதற்கு பல காலம் முன்னரே இதை உணர்ந்திருந்தார்கள் போலும்.



அந்த ஞானிகள் இயேசுவைப் பணிந்துகொள்ள தமக்குண்டான எல்லாவற்றையும் துறந்து விட விருப்பமாய் இருந்தார்கள். இயேசுவைத் தேடும் சரியான நோக்கமுடையவர்களானதால் வசதியான தங்கள் வீடுகளையும் விட்டு விட்டு, கடுமையான நெடும்பயணம் செய்ய விருப்பமாய் இருந்தார்கள். அவர்கள் இயேசுவைப் பணிந்து கொள்ள வாஞ்சையாய் இருந்தார்கள்.



இயேசுவைப் பணிந்து கொள்ள நீங்கள் எவற்றை விட்டுவிடுவீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

The Hope Of Christmas

பெரும்பாலான மக்களுக்கு, கிறிஸ்துமஸ் என்பது செய்யவேண்டிய வேலைகளைக் கொண்ட ஒரு நீண்ட பட்டியலாக மாறிவிட்டது. அது அவர்களை டிசம்பர் 26 அன்று களைப்பாக்கி விடுகிறது. இந்த தொடர் செய்தியின் வாயிலாக, பாஸ்டர் ரிக் நாம் கிறிஸ்துமஸை க...

More

இந்த தியானம் ரிக் வாரனால் © 2014. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. அனுமதியோடு உபயோகிக்கப்படுகிறது.

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்