மேலும் அவன் அவர்களை நோக்கி, “கொலைசெய்து இரத்தத்தைச் சிந்தாமல், இந்த பாலைநிலத்தில் உள்ள கிணற்றில் அவனைப் போட்டுவிடுங்கள், அவன்மீது கை வைக்க வேண்டாம்” என்றான். யோசேப்பை அவர்களிடமிருந்து தப்பிக்க வைத்து, பின்னர் தன் தந்தையிடம் மறுபடியும் அழைத்துச் செல்லவே ரூபன் அவ்வாறு சொன்னான்.