மேலே வானத்திலும், கீழே பூமியிலும், அதன் கீழேயுள்ள தண்ணீரிலும் இருக்கின்ற எந்தவொரு உருவத்திலேனும் உனக்காக நீ உருவச்சிலையைச் செய்ய வேண்டாம். நீ அவற்றை வணங்கவோ வழிபடவோ வேண்டாம். ஏனெனில், நானே உன் இறைவனாகிய கர்த்தர், நான் வைராக்கியமுள்ளவராயிருந்து, என்னை வெறுப்பவர்களின் காரணமாக, பெற்றோரின் பாவத்துக்காக மூன்றாம் நான்காம் தலைமுறை மட்டும் அவர்களுடைய பிள்ளைகளைத் தண்டிக்கின்றவராய் இருக்கின்றேன்.