ஆகையால் இப்போது நீங்கள் என் சொல்லைக் கேட்டு, என் உடன்படிக்கையை கைக்கொண்டால், அனைத்து இனத்தவருக்குள்ளும் நீங்களே எனக்கு உரித்தான சொத்தாக இருப்பீர்கள். பூமி முழுவதும் என்னுடையது. நீங்களோ என்னுடைய மதகுருக்களின் இராச்சியமாகவும், பரிசுத்த இனமாகவும் இருப்பீர்கள்.’ இஸ்ரயேலரோடு நீ பேசவேண்டிய வார்த்தைகள் இவைகளே.”