திட்ட விவரம்

தேவனோடு உரையாடல்மாதிரி

Conversations With God

14 ல் 8 நாள்

யாரெல்லாம் பிதாவோடு இனிமையான ஆழமான உரையாடலை கொண்டிருக்க விரும்புகிறார்களோ அவர்கள் காத்திருக்க கற்றுக்கொள்ள வேண்டும் - அவருடைய ஞானம், அதிகாரம், சித்தம், நேரத்தை அறிந்த தன்மையில் சார்ந்து. ஆனால் ஏன் தேவன் நாம் காத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்? கீழே நாம் அனைவரும் விரும்புகிற ஒரு முதிர்ச்சியான, உறவோடுகூடிய ஜெப வாழ்விற்கான வாழ்முறைகள் இருக்கின்றன, அவை நாம் காத்திருக்க கூடாமல் விரும்புகின்ற ஜெபங்களாக இருக்கும்.



என்னால் முடிந்தால் இந்த முதல் தத்துவத்தை அதிக பிரபலமாக நான் பிரகடனப்படுத்துவேன்: ஜெபத்திற்கு முன்னாள் காத்திருப்பது நல்லது, நம்முடைய விண்ணப்பத்தை கேட்பதற்கு முன்னாள் தேவனோடு உரையாடுவது. இந்த அறிந்துகொள்ளுதலின் நேரத்தில் நாம் தேவனுடைய இருதயத்தில் என்ன இருக்கிறது என்று முதலாவது அறிந்துகொள்ளுகிறோம். காத்திருப்பது நாம் அவர் சித்தத்திற்கு ஒப்புக்கொடுப்பதற்கு அடையாளம். சரியானதை கேட்பதற்கு நமக்கு ஞானம் தேவை.



சீடர்கள் இயேசுவினிடம் ஜெபிக்க கற்றுத்தர கேட்டபோது, அவர் சொன்னார் "உம் ராஜ்ஜியம் வருவதாக, உம் சித்தம் பரமண்டலங்களில் செய்ய போடுவதுபோல பூமியிலும் செய்யப்படுவதாக" (மத்தேயு 6:10). நாமும் கூட நம்முமுடைய விண்ணப்பத்தை கேட்க இயேசுவிடம் முதலாவது கற்றுத்தர கேட்கலாம். அவருடைய சித்தத்தை இந்த பூமியில் அவர் விரிக்கும்போது, அவருடைய மகிழ்ச்சி எதை தருவதற்கு உள்ளது என்று அறிந்து நாம் நம்முடைய விண்ணப்பத்தை கேட்கலாம். இந்த விதமாக கேட்கும்போது நம்முடைய இருதயத்திலும் இருக்கும் வாஞ்சை நிறைவேற வழிவகுக்கும். இந்த நடவடிக்கை என்னுடைய ஜெப வாழ்க்கையை அதிகமாக சிறப்பாக்கியுள்ளது. தேவனுடைய சித்தத்தை அறிந்து அவரிடம் திரும்ப ஜெபிக்கும் சந்தோஷத்தை அனைவருக்கும் அதிகமாக பரிந்துரைக்கிறேன். இதேபோலத்தான் நாம் தேவனாகிய அதிசயமான ஆலோசனைகர்த்தா திரும்ப வர நாம் காத்துக்கொண்டிருக்கிறோம்.



சில வேளைகளில் காத்திருக்க தேவை ஏற்படுகின்றது விண்ணப்பத்திற்கு பின்னாக. இந்த விதமான காத்திருப்பு பருவக்காலத்தைப்போல இருக்கிறது. எப்போதுமே நாம் பெற்றுக்கொண்டிருக்க முடியாது. "எல்லாவற்றிற்கும் அதனதன் காலம் உண்டு" (பிரசங்கி 3:1) சரியான காலம் நிச்சயம் வரும், ஆனால் சரியான நேரம் வரைக்கும் நாம் காத்திருக்க வேண்டும். நம்முடைய ஜெபங்களுக்கான பதில்கள் சரியான காலத்தில் வருவது இரட்டிப்பான அழகாக இருக்கும்.



முடிவில், ஜெபத்தில் காத்திருப்பது நமக்கு விடாப்பிடியான சுபாவத்தை கற்றுத்தரும், அந்த சுபாவம் விலைமதிப்பற்றது. முதிர்வாகவும் முழுமையாகவும் இருக்க விரும்புவோர் அதை எட்ட மேடான வளைவான அந்த படிகளை ஏற வேண்டும். வேதாகமம் இந்த கடினமான வழி கொண்டாடப்படவேண்டும் என்பர் சொல்கிறது! இந்த வழியின் கடினத்தை நாம் இந்த நேரத்தில் கொச்சை படுத்தலாம், ஆனால் பின்னர் அதை எதற்காகவும் விட்டு கொடுக்க மாட்டோம். இந்த காத்திருக்கும் காரியத்தை தவிர்த்து செல்லாமல் இருக்க தேவன் நம்மை ஆசீர்வதிக்கிறார்.


நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Conversations With God

'தேவனோடு உரையாடல்' என்னும் இந்த திட்டம் உங்களை ஜெப ஜீவியத்தில் இன்னும் அதிக சந்தோஷத்தோடு தேவனைச் சேரவும், தேவனுடைய சத்தத்தை கேட்கவும் செய்வதான விதிமுறைகளை கொண்டுள்ளது. தேவன் நம்முடைய ஜீவிய நாளெல்லாம் நாம் ஒரு உரையாடலை அவ...

More

இந்த திட்டத்தை வழங்கிய சூசன் எக்ஹோஃப் க்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை அனுகவும் https://www.amazon.com/Prayer-That-Must-Power-Conversational/dp/1496185560/ref=sr_1_1?ie=UTF8&qid=1498693709&sr=8-1&keywords=prayer+that+must%2C+the+power+of+conversational+prayer

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்