நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்மாதிரி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

7 ல் 7 நாள்

கிறிஸ்துமஸ் உரையாடல்கள்

கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள்; உங்களிலிருக்கிற நம்பிக்கையைக் குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். (1 பேதுரு 3:15)

ஒரு மலை அடிவாரத்தின் அருகில் அமைந்துள்ள ஒரு சிறிய அணையைப் பார்வையிட எங்கள் குடும்பத்தினர் உற்சாகமாக இருந்தனர். இருப்பினும், அங்கு சென்றதும், ஆற்றில் தண்ணீர் இருப்பதற்கான எந்த அறிகுறிகளையும் காணவில்லை; சுட்டெரிக்கும் வெயிலில் வறண்ட நிலம் மட்டுமே இருந்தது. எங்கள் பயணம் வீணாகிவிட்டது என்று நாங்கள் நினைத்தபோது, அந்த ஊரைச் சார்ந்த இரண்டு நபர்களுடன் உரையாடலைத் தொடங்கினோம். உரையாடலின் போது, அவர்களில் ஒருவர் திடீரென்று, “இயேசு யார்?” என்று கேட்டார். அங்கிருந்து தொடங்கி, இயேசுவைப் பற்றி அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

அப்போஸ்தலர் 8:26-35இல், கிறிஸ்துவின் சீஷரான பிலிப்புவைப் பற்றிப் படிக்கிறோம். அவர் வனாந்திரத்தில் ஒரு எத்தியோப்பிய மந்திரியை சந்திக்க பரிசுத்த ஆவியால் வழிநடத்தப்பட்டார். அவர் இரதத்தின் அருகே வந்தபோது, இந்த மந்திரி ஏசாயா புத்தகத்திலிருந்து கிறிஸ்துவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களைப் படிப்பதைக் கேட்டார். பிலிப்பு இந்த சந்தர்ப்பத்தை இழக்கவில்லை. எனவே மந்திரி எழுப்பிய கேள்விகளில் தொடங்கி, பிலிப்பு இயேசுவைப் பகிர்ந்துகொண்டார். அதின் விளைவாக, மந்திரி கிறிஸ்துவுடன் ஒரு தெய்வீக சந்திப்பைப் பெற்றார்.

எத்தியோப்பிய மந்திரி மற்றும் அணையில் நாம் சந்தித்த நபர்களைப் போல, பலர் உண்மையைத் தேடுகிறார்கள். இயேசுவைப் பற்றி யாராவது சொல்வதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நாம் கிறிஸ்துவை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதம் முக்கியமானது. இந்த உரையாடல்கள் உங்கள் வேலை ஸ்தலத்தில், உடற்பயிற்சி கூடத்தில், ஓட்டலில், பள்ளியில் அல்லது வீட்டிற்குச் செல்லும் வழியில் என்று எங்குவேண்டுமானாலும் நடைபெறலாம். அவை எங்கு நடந்தாலும், நமது பதில் மென்மையாகவும் மரியாதையுடனும் இருக்க வேண்டும் (1 பேதுரு 3:15). சில நேரங்களில் இந்த உரையாடல்களுக்கு வார்த்தைகள் கூட தேவையில்லை. அசிசியின் பிரான்சிஸ் சொல்லும்போது, “எல்லா நேரங்களிலும் நற்செய்தியைப் பிரசங்கியுங்கள், தேவைப்படும்போது, வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள்” என்ற சொல்லுகிறார். இந்த கிறிஸ்துமஸ் உரையாடல்கள் சந்தர்ப்பம் நமக்கு வாய்க்கும்போது, நமது வார்த்தைகளும் செயல்களும் மற்றவர்களை கிறிஸ்துவிடம் வழிநடத்தக்கூடியதாய் அமையட்டும்.

இந்த கிறிஸ்துமஸில், உங்கள் வார்த்தைகளும் செயல்களும் எவ்வாறு கிறிஸ்துவை வெளிப்படுத்த முடியும்? தேவன் உங்களை மற்றவர்களிடம் எவ்வாறு வழிநடத்தக்கூடும்?

அன்புள்ள இயேசுவே, இந்த பண்டிகை நாட்களில் உம்மைப் பற்றிய நற்செய்தி தேவைப்படும் ஒருவரை எனக்குக் காண்பியும். உமது ஆவியின் தூண்டுதலுக்கு செவிகொடுக்கும் நபராய் என்னை பயன்படுத்தும்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் பரிசைப் பகிர்ந்து கொள்வது பற்றிய 7 சிந்தனைகள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread - India க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/