நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்மாதிரி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

7 ல் 3 நாள்

கிறிஸ்துமஸ் அவசரம்

கண்டு, அந்தப் பிள்ளையைக் குறித்துத் தங்களுக்குச் சொல்லப்பட்ட சங்கதியைப் பிரசித்தம்பண்ணினார்கள். (லூக்கா 2:17)

கிறிஸ்துமஸ் மாதம் தொடங்கியவுடன், எங்கள் காலண்டரில் நாங்கள் செய்து முடிக்கவேண்டிய வேலைகளின் பட்டியல் நீண்டதாயிருந்தது. மர இருக்கைகள் புதுப்பிக்கப்பட வேண்டும்; அலங்காரங்கள் செய்யப்பட வேண்டும்; புதிய திரைச்சீலைகள் தொங்கவிடப்பட வேண்டும்; கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்க வேண்டும் என்று செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தது! கிறிஸ்துமஸ் நாளில், கடைசி சில வேலைகளில் நாங்கள் மும்முரமாய் இருந்ததினால் நேரத்தை கணக்கில்கொள்ளவில்லை. கடைசியில் நாங்கள் மிகவும் சோர்வடைந்து, குறித்த நேரத்திற்கு திருச்சபை ஆராதனைக்கு செல்லுவதற்கு மிகவும் அவசரப்படவேண்டியதாய் இருந்தது.

கிறிஸ்து பிறந்த நாளில், வயல்களில் சில மேய்ப்பர்களும் அவசரத்தில் இருந்தனர். ஆனால் அதற்கு ஒரு நேர்த்தியான காரணம் இருந்தது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மீட்பர், அபிஷேகம் பண்ணப்பட்ட மேசியா பிறந்தார் என்ற செய்தியை அவர்கள் பெற்றிருந்தனர் (வச.10). ஒரு தொழுவத்தில் குழந்தையைப் பார்க்க அவர்கள் அழைக்கப்பட்டனர் (வச.12). அந்த குழந்தையை நேரில் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்ற அவர்கள், உற்சாகத்தால் நிரம்பி, தேவதூதன் மூலம் கர்த்தர் அவர்களுக்குச் சொன்ன இந்த நிகழ்வைக் காண விரைந்தனர் (வச.15). அவர்கள் நேரத்தை வீணாக்காமல், பரலோகத்திலிருந்து பெற்றுக்கொண்ட ஆலோசனையின்பேரில், “முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையை” கண்டார்கள் (வச.16). மேசியாவாகிய இயேசுவைப் பார்த்த பிறகு, அவரைக் குறித்த செய்தியை பிரஸ்தாபப்படுத்த விரைந்தனர் (வச.17).

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான முன் ஆயத்த வேலைகளைமும்முரமாய் செய்வதின் மூலம், கிறிஸ்மஸின் உண்மையான நோக்கமாகிய கிறிஸ்துவை பிரஸ்தாப்படுத்துவதிலிருந்து நாம் திசைதிருப்பப்படலாம். அவர் எப்படி, ஏன் பிறந்தார் என்ற செய்தியை, நமது வார்த்தைகள் மற்றும் கிரியைகள் மூலம் பிரஸ்தாபப்படுத்துவதே நமது மும்முரமான வேலையாய் இருக்கவேண்டும். இந்த பண்டிகை நாட்களின் பருவம் அற்புதமானவை என்றாலும், கிறிஸ்துவை அனுபவித்து அவரை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்துவதன் மகிழ்ச்சியானது அதைவிட இன்னும் அதிகமானது.

கிறிஸ்துமஸின் முக்கியமான விஷயங்களில் நீங்கள் எவ்வாறு கவனம் செலுத்த முடியும்? இந்த பண்டிகை நாட்களில் யாருடன் கிறிஸ்துவைப் பகிர்ந்து கொள்ள முடியும்?

அன்புள்ள இயேசுவே, உமது பிறப்பின் உண்மையான மகிழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள எனக்கு உதவிசெய்யும்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் பரிசைப் பகிர்ந்து கொள்வது பற்றிய 7 சிந்தனைகள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread - India க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/