நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்மாதிரி

ஒரு தாழ்மையான இரட்சகர்
மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். (பிலிப்பியர் 2:3)
லக்னோ நகரம், இந்தியாவின் கருணை மற்றும் விருந்தோம்பலின் முடிசூடா தலைநகரம் என்று கருதப்படுகிறது. லக்கோவின் இந்த குணாதிசயத்தை ஒரு நகைச்சுவை சித்தரிக்கும்போது, “பயணிகள் ஏன் லக்னோ ரயில் நிலையத்தை விட்டு வெளியேறுவதில்லை என்றால், அவர்கள் ஒருவருக்கொருவர் “பெஹ்லே ஆப்!” என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்களாம்என்று வேடிக்கையாக சித்தரிக்கப்படுகிறது. அதாவது, “நீங்கள் முதலில் செல்லங்கள்” என்று மற்றவருக்கு வழிவிடுகிறார்களாம். லக்னோவாசிகளிடமிருந்து, மற்றவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் செயல் பற்றி நாட்டின் பிற பகுதிகள் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பது உண்மைதான்.
“உங்களில் பெரியவனாயிருக்கிறவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன்” (மத்தேயு 23:11) என்று சொன்ன இயேசுவே, அவரை பின்பற்றும் நமக்கு தாழ்மையின் அளவுகோலை பிரதிபலிக்கிறார். அவர் அதை வெறும் வார்த்தையாய் மட்டும் சொல்லாமல், தன்னுடைய கிரியைகளின் மூலம் அதை நிரூபித்தார். இந்த உலகத்தின் சிருஷ்டிகரான இயேசு, மனித சாயலாய் மாறி, ஒரு தொழுவத்தில் பிறந்து, அடிமையின் ரூபமெடுத்து, மரணம் வரைக்கும் தன்னுடைய கீழ்ப்படிதலை நேர்த்தியாய் பிரதிபலித்தார் (வச. 6-8). இந்த கீழ்ப்படிதலும் மனத்தாழ்மையும்தான், உலக இரட்சகர் என்னும் விலையேறப்பெற்ற ஸ்தானத்திற்கு அவரை உயர்த்தியது எனலாம் (வச. 9-11).
மனத்தாழ்மையான இருதயம் இருப்பது எளிதல்ல. நாம் நேசிக்கும் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் போன்றவர்களுக்கு முன்பாக மனத்தாழ்மையை வெளிப்படுத்துவது அவ்வளவு கடினம் அல்ல; ஆனால் அதைக் கடந்து நமக்கு அறிமுகமில்லாத மற்றவர்களுடைய தேவையை முக்கியமாய் கருதுவது கடினமான ஒன்று (மாற்கு 12:31). இயேசு மற்றவர்களை தமக்கு மேலாக வைப்பதன் மூலம் உண்மையான மனத்தாழ்மையின் தன்மையை நமக்குக் காட்டினார். இந்த கிறிஸ்துமஸில் நாமும் அவருடைய கிருபையான முன்மாதிரியைப் பின்பற்றுவோமாக.
மற்றவர்களின் தேவைகளை உங்கள் சொந்த தேவைக்கு மேலாக எவ்வாறு வைக்க முடியும்? எல்லா மக்களிடமும் நீங்கள் எவ்வாறு அன்பு காண்பிக்க முடியும்?
ஆண்டவரே, உம்மைப் பிரியப்படுத்தும் மனத்தாழ்மையை எனக்குள் விதையுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் பரிசைப் பகிர்ந்து கொள்வது பற்றிய 7 சிந்தனைகள்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread - India க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

30 நாள் அற்புதங்கள்

வனாந்தர அதிசயம்

மேடைகள் vs தூண்கள்

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

ஆண்டவருடைய கணக்கு
