நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்மாதிரி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

7 ல் 4 நாள்

அன்பிற்காகப் பிறந்தவர்

தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்குத் தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. (1 யோவான் 4:9)

தமிழில் “அம்மா” என்றால் தாய் என்று பொருள். இந்த வார்த்தையானது ஏமி கார்மைக்கேலின் கல்லறை அமைந்துள்ள இடத்தைக் குறிக்கும் ஒரு பறவைக்குளியல் தொட்டியில் பொறிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் டோனாவூரில் உள்ள அவரது மிஷன் பள்ளி, கோயில் விபச்சாரத்தில் சிக்கிய ஆயிரக்கணக்கான சிறுமிகளுக்கு ஒரு சரணாலயமாக மாறியது. இந்தியாவில் அவரது ஆரம்ப ஆண்டுகளில், சேலை அணிவது அவர்களுடைய வழக்கம் இல்லை என்றாலும், ஒரு சிறுமியை மீட்பதற்காக சேலை அணிந்துகொண்டு பல மைல்கள் தூரம் சைக்கிளில் பயணம் செய்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. 1931 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பேரழிவுகரமான வீழ்ச்சிக்குப் பிறகு அவர் படுத்தபடுக்கையாய் ஆனாலும், மற்றவர்களின் உதவியோடு இந்த குழந்தைகளை மீட்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டார். அந்த குழந்தைகளிடம் உங்களுக்கு ஏமியிடம் அதிகமாய் ஈர்த்த விஷயம் என்னவென்று கேட்டபோது, “அவர்களின் அன்பு தான், அவர்கள் எங்களை நேசித்தார்கள்” என்று பதிலளித்தனராம்.

சில சமயங்களில் மனிதனுடைய மற்ற எல்லா நற்பண்புகளைக் காட்டிலும், அன்பு பிரகாசமாய் ஒளிர்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கிறிஸ்து இல்லாமல் உண்மையான அன்பை அனுபவிக்க முடியாது. ஏனென்றால், அவரே அன்பின் வரையறை (வச. 8). கிறிஸ்துவின் பிறப்பு, இறப்பு மற்றும் உயிர்த்தெழுதலின் மூலம் அந்த அன்பானது நமக்கு வெளிப்பட்டிருக்கிறது. இயேசுவின் அன்பு, கொடுத்து வாங்கப்பட்ட ஒன்றல்ல; தகுதியில்லாதவர்களுக்கு கொடுக்கப்பட்ட ஒன்று (வச. 11). அன்பை தேவன் பார்க்கும் விதத்தில் நாம் பார்க்கும்போது, அதை எவ்வாறு பிரஸ்தாப்படுத்துவது என்பது குறித்த நமது முழு கண்ணோட்டத்தையும் அது மாற்றுகிறது. இயேசு நேசித்ததுபோல நாம் பிறரை நேசிக்க தவறும்போது, தேவனை நாம் மெய்யாகவே அறிந்திருக்கிறோம் என்று உறுதியாய் கூறமுடியாது (வச. 7-8). அந்த உண்மையான அன்பின் அர்த்தத்தை வெளிப்படுத்தவே இயேசு பிறந்தார்.

பூமியில் உள்ள ஒவ்வொரு நபரும் தேவனுடைய சாயலில் உண்டாக்கப்பட்டுள்ளனர் (ஆதியாகமம் 1:27). அன்பு தேவைப்படும் பலரை நாம் சந்திக்கிறோம். தேவனுடைய பிள்ளைகளாக, இந்த கிறிஸ்துமஸில், உண்மையான அன்பு தேவைப்படுபவர்களுக்காக நம் கண்களைத் திறந்து வைப்போம். டோனாவூரில் அடிமைப்படுத்தப்பட்ட சிறுமிகளிடம் அன்பின் உருவமாக மாறிய ஏமியைப் போல, நாமும் செய்யும் அனைத்து காரியங்களிலும் கிறிஸ்துவை பிரதிபலிக்க பிரயாசப்படுவோம். அவ்வாறு செய்வதின் மூலம், பிதாவின் அன்பை வெளிப்படுத்தும் கிறிஸ்து பிறப்பின் நோக்கத்தை அனைவரும் அனுபவிக்கும்படி செய்யலாம்.

கிறிஸ்துவின் அன்பு உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது? இந்த கிறிஸ்துமஸ் நாட்களில் மற்றவர்களிடம் அன்பைக் காண்பிக்க நீங்கள் என்ன செய்யக்கூடும்?

அன்புள்ள இயேசுவே, உம்மைப்போலவே எதையும் பிரதிபலன் எதிர்பார்க்காமல் செய்யவும், மற்றவர்களை நேசிக்கவும் எனக்குக் கற்றுத் தாரும்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் பரிசைப் பகிர்ந்து கொள்வது பற்றிய 7 சிந்தனைகள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread - India க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/