நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்மாதிரி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

7 ல் 6 நாள்

நம்பிக்கையின் வீடு

யோப்பா பட்டணத்தில்... தபீத்தாள் என்னும் பேருடைய ஒரு சீஷி இருந்தாள்; அவள் நற்கிரியைகளையும் தருமங்களையும் மிகுதியாய்ச் செய்துகொண்டுவந்தாள். (அப்போஸ்தலர் 9:36)

கலா, டெலிவரி பணியாளரை சற்று நிற்கச் சொன்னாள். அவள் விரைவாக ஒரு அட்டைப் பெட்டியில் ஜூஸ், சில பிஸ்கட்கள் மற்றும் இயேசுவைப் பற்றிய ஒரு துண்டுப்பிரசுரத்தை எடுத்து சோர்வடைந்த அந்த நபரிடம் கொடுத்தாள். அவளுடைய இந்த கருணையின் செய்கையால் டெலிவரி பணியாளர் குழப்பமடைந்ததைப் பார்த்தபோது, அவள் புன்னகையுடன், “இந்த ஊரடங்குகளின் போது எங்களுக்கு சேவை செய்ததற்கு நன்றி; கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்; இயேசு உங்களை நேசிக்கிறார்!” என்று சொன்னாள். ஊரடங்கு அவருடைய கருணை குணத்தை அடைக்கவில்லை.

தபீத்தாளும் அதுபோன்ற ஒரு சீஷி. அவள் எப்போதும் பிறருக்கு நன்மை செய்து கொண்டிருந்தாள். அவள் தனது சமூகத்தில் உள்ள விதவைகளுக்கு வஸ்திரங்களை தயாரித்தாள். அவளுடைய சாட்சியான வாழ்க்கை கிறிஸ்துவுக்காக பலரை ஆதாயப்படுத்தியது. அவளுடைய வாழ்க்கையும் சாட்சியும் யோப்பாவில் உள்ள திருச்சபையின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது. அவள் நோய்வாய்ப்பட்டு இறந்தபோது, தேவன் அவளை மரித்தோரிலிருந்து உயிரோடு எழுப்புவார் என்ற நம்பிக்கையுடன் பேதுரு வரவழைக்கப்பட்டார். தபீத்தாள், தன்னை சுற்றியுள்ள சமூகத்திற்கு தன்னுடைய வீட்டை நம்பிக்கையின் வீடாக மாற்றியிருந்தாள்.

நாம் வாழும் சமூகங்களில் இந்த வகையான மறுரூபமாக்கும் மாற்றத்தை ஏற்படுத்த நாமும் அழைக்கப்படுகிறோம். நமது சிறிய கருணைச் செயல்கள், நமது வேலை செய்யும் இடங்கள் அல்லது கல்வி மையங்களில் உள்ள மற்றவர்களுக்கு கிறிஸ்துவின் அன்பைக் காட்டக்கூடும். கிறிஸ்துமஸ் என்பது நமது அண்டை வீட்டாருக்கும் நண்பர்களுக்கும் அன்பு, கருணை மற்றும் விருந்தோம்பல் ஆகியவற்றை வழங்குவதற்கான ஒரு சிறந்த நேரம் என்றாலும், தேவனுடைய அன்பைப் பிரஸ்தாபப்படுத்தும் நம்முடைய பணி அன்றாடம் நடைபெறவேண்டிய ஒன்று. ஊழியம் என்பது மிஷன் பணித்தளத்தில் தொடங்குவதில்லை, அது நம்முடைய இடங்களில் துவங்குகிறது.

நமது இடங்களில் தேவனுடைய ஊழியத்தை எவ்வாறு செயல்படுத்த முடியும்? இந்த பண்டிகை நாட்களில் நம் மூலம் தேவனுடைய அன்பை அனுபவிக்க வேண்டிய சிலர் யார்?

அன்புள்ள ஆண்டவரே, என் சிந்தனை, சொல் மற்றும் செயல் உம்முடைய மிஷன் பணித்தளமாக மாறட்டும்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் பரிசைப் பகிர்ந்து கொள்வது பற்றிய 7 சிந்தனைகள்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread - India க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/