நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்மாதிரி

இந்த நாட்களில் ஊழியம் செய்தல்
அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள். (1 பேதுரு 4:10)
எஸ்தர் “பென்” கிம்சந்த், குஜராத் மாநிலத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்த 20 ஆம் நூற்றாண்டின் எழுத்தாளர். தனது எழுத்தின் மூலம் பெண்ணுரிமைக்காக அவர் போராடினார். நல்ல தரமான கல்வியானது பெண்களை அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகங்களுக்குள் மரியாதைக்குரிய ஸ்தானங்களில் நிற்கச்செய்யும் என்று அவர் எழுதினார். எஸ்தர் தனது ஸ்தானத்தை தன்னுடைய சுய ஆதாயத்திற்காய் மாத்திரம் பயன்படுத்திக்கொள்ளவில்லை; மாறாக, தன்னைச் சுற்றியுள்ள தன்னுடைய ஜனத்தை காப்பாற்றுவதற்காய் பயன்படுத்தினாள்.
ஆசியாவின் பல பகுதிகளுக்கு சிதறடிக்கப்பட்ட முதலாம் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு பேதுரு நிருபம் எழுதுகிறார் (1 பேதுரு 1:1). ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கவும், அவர்கள் பெற்ற “வரத்தின்படியே.. ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்” என்று அவர் அவர்களைத் தூண்டுகிறார் (வச.10). இந்த வரங்களைக் குறித்து மேன்மைப்பாராட்டாதபடிக்கு, அதை பேதுரு கர்த்தருடைய கிருபையாய் கருதும்படி வலியுறுத்துகிறார். தேவனுக்குச் சொந்தமானதை விடாமுயற்சியுடன் நிர்வகிக்கும் “உண்மையுள்ள உக்கிராணக்காரர்களாக” இருக்க அவர்களை ஊக்குவிக்கிறார். அவர்கள் போதித்தால் “தேவனுடைய வாக்கியங்களின்படி” போதிக்கவும், “ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படி” செய்யவும் அவர் அவர்களை ஊக்குவிக்கிறார். அவ்வாறு செய்வதின் மூலம் அவர்களின் அனைத்து கிரியைகளிலும் செய்கைகளிலும் தேவன் மகிமைப்படுவார் (வச.11).
பரிசுகளை பரிமாறிக்கொள்ளும் இந்த பண்டிகை நாட்களில், நாம் பகிர்ந்துகொள்ளக்கூடிய பொருள் உடைமைகளை விட, எஸ்தர் மற்றும் ஆதித்திருச்சபைக்கு கொடுக்கப்பட்டதுபோலவே நமக்கும் சில வரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை உணருவோம். அது உணவு தயாரிப்பது, கிறிஸ்துவைப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது அல்லது அன்பு தேவைப்படும் ஒருவருக்கு நம் வீடுகளைத் திறந்துகொடுப்பது போன்றவையாக இருக்கலாம். இந்த பரிசுகள் நமக்கு எளிமையானதாகத் தோன்றினாலும், அவை தேவனுடைய ராஜ்யத்தை விரிவுபடுத்த உதவுகின்றன. இதனால் மற்றவர்கள் அனைத்திலும் மிகப்பெரிய பரிசான கிறிஸ்துவை தங்களுடைய வாழ்க்கையில் உளமாற அனுபவிக்க முடியும்.
தேவன் உங்களிடத்தில் என்னென்ன பரிசுகளை ஒப்படைத்துள்ளார்? மற்றவர்களுக்கு சேவை செய்ய அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம்?
அன்பான தேவனே, மற்றவர்களுக்கு சேவை செய்வதன் மூலம் உமக்கு உண்மையாக ஊழியம் செய்ய என்னை பலப்படுத்தும்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தில் கிறிஸ்துவின் பரிசைப் பகிர்ந்து கொள்வது பற்றிய 7 சிந்தனைகள்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Our Daily Bread - India க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: https://tamil-odb.org/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தனித்துவமான உவமைகள் - ஆழமான அர்த்தங்கள் அடங்கிய சிறுகதைகள்

ஆண்டவருடைய கணக்கு

மேடைகள் vs தூண்கள்

நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளுதல்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

30 நாள் அற்புதங்கள்

மனம் புதிதாகிறதினாலே ....தேவசித்தம் பகுத்தறியலாம் - வாங்க. ரோமர் :12-2 சகோதரன் சித்தார்த்தன்

நாவில் இருக்கும் அதிகாரம் – சகோதரன் சித்தார்த்தன்

வனாந்தர அதிசயம்
