வனாந்தர அதிசயம்மாதிரி

வனாந்தர அதிசயம்

6 ல் 5 நாள்

உங்கள் கால்களை அலைமோத விடாதிருங்கள்

வனாந்தரம் போன்ற சூழ்நிலைகளில் இருக்கும் பிரச்சனை, நம் கால்கள் எளிதில் இடறக் கூடும் என்பதே. மலைமேல் ஏறப் போகிறேன் என்று ஓடும்போது வழியில் இடறி விழவும் வாய்ப்புண்டு. வனாந்தரத்தை விட்டு எப்படியாவது ஓடிவிட வேண்டும் என்று தீவிரமாக யோசிக்கும்போது, எங்கேயோ கட்டப்பட்ட நிலை உண்டாவதும் சாத்தியமே. ஏனோக்கையும், நோவாவையும் போல தம்மோடு நடக்கும்படி தேவன் நம்மை அழைக்கிறார். அதனால், அவர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளே இருக்கவில்லை என்று அர்த்தமல்ல, பிரச்சனைகளின் மத்தியிலும் அவர்கள் தேவனை முந்திக் கொண்டு ஓடவில்லை. அவர்கள் உண்மையுள்ளவர்களாக தேவனோடு நடந்தார்கள் என்று வேதம் உறுதி செய்கிறது. வாழ்க்கையில் நமக்குக் குறிக்கப்பட்ட பாதையை விட்டு விலகி நடக்காமல் இருக்கலாம், ஆனால் சூழ்நிலை சரியில்லாமல் போகும்போது, சிறு தடை வந்தாலும் இடறி விழுந்துவிடுவோம். ஒரு கடுமையான நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், தேவனிடமிருந்து சுகத்தைப் பெற உங்களுக்குத் தகுதி இல்லை என்று நினைக்கத் தொடங்குவீர்கள். உங்களுக்கு அன்பானவரை இழக்க நேரிடும்போது, தேவன் அவரை உங்களிடமிருந்து பிரித்துவிட்டாரோ என்று நினைக்கத் தோன்றும். உங்கள் ஜெபங்களுக்கு பதில் வராதபோது, ஜெபம் செய்வதையே விட்டுவிடலாம் என்று நினைப்பீர்கள்.

நீங்கள் கடந்து செல்லும் பாதையை உங்கள் சபைப் போதகரோ அல்லது சபையினரோ புரிந்து கொள்ளவில்லை என்றால், சபைக்கு வெளியில் இருக்கும் நண்பர்களுடன் வாழ்வதே சிறந்தது என்று தீர்மானிப்பீர்கள்.

எங்கு இடறுகிறீர்கள் என்பதை அறிந்துகொள்ளுங்கள். உங்களைத் தடம் மாறச் செய்யும் அந்த மோசமான எண்ணங்களைக் கண்டுகொள்ளுங்கள். துரித இன்பம் மற்றும் உடனடி திருப்திக்காக இனி வழியே இல்லை என்று சொல்லும் பாதைக்கு நேராக உங்களை நடத்திவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

வனாந்தரம் கடினமானதுதான், சந்தேகமே இல்லை. ஆனால், இயேசு உங்களுக்காகக் குறித்திருக்கும் நேரான மற்றும் இடுக்கமான பாதையில் நடந்து செல்ல நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அந்தப் பாதை எளிதாகாமல், பரிச்சயமாகாமல், அநேக திருப்பங்களைக் கொண்டதாக இருக்கலாம். ஆனால், அந்தப் பாதை இயேசுவே சோதித்து அறிந்த பூர்வ பாதையாக இருக்கும். இயேசு, பிசாசினால் சோதிக்கப்படும்படி பரிசுத்த ஆவியானவரால் வனாந்தரத்திற்குக் கொண்டு போகப்பட்டது நினைவிருக்கிறதா? அந்த 40 நாள் சோதனையின்போது, இயேசு உலகத்தில் தமக்குக் கொடுக்கப்பட்ட பணியில் இடறும்படி சத்துரு தன்னிடமிருந்த எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தினான். ஆனால், இயேசு உறுதியாகத் தம் பாதையில் நிலைத்திருந்தார், ஏனென்றால் தம்மை அனுப்பியவர் யார், தாம் எதற்காக அனுப்பப்பட்டோம் என்பதை அவர் அறிந்திருந்தார். ஒரு வினாடி கூட அவர் சந்தேகத்தால் தம் முதன்மை நோக்கத்திலிருந்து பின்வாங்கவோ அல்லது அசையவோ இல்லை.அதிகமதிகமாக அவரைப் போல மாறுவதே நம் இலக்காக இருக்க வேண்டும். உங்கள் தீர்மானம் சோதிக்கப்பட முடியுமா? ஆம். வழி விலகும்படி தூண்டப்படுவீர்களா? ஆம். ஆனால், நீங்கள் இயேசுவைப் பின்பற்றினால், உங்கள் கால்கள் எவ்வளவு உறுதியாக இருக்கும் என்பதை அறிந்து ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தர அதிசயம்

இயேசுவின் சீஷர் அனைவரும் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய ஒரு இடம், வனாந்தரம். ஆனால் அது மோசமானதல்ல. அது தேவனுடன் அதிக நெருக்கத்தையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களைப் பற்றிய அதிகத் தெளிவையும் கொண்ட இடமாக இருக்கும். இந்த வேதாகமத் திட்டம் உங்கள் வனாந்தர காலகட்டத்தின் அதிசயத்தைக் காணச் செய்யும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/christinejayakaran
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்