வனாந்தர அதிசயம்மாதிரி

உங்கள் இருதயத்தை அலைமோத விடாதீர்கள்
சங்கீதக்காரன் தேவனிடம் ஒரு சுவாரஸ்யமான வேண்டுகோள் வைத்தார். அதில், “அவருடைய நாமத்திற்குப் பயப்படும்படி தன்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்துமாறு” கேட்கிறார். தன் இருதயம் சில சமயங்களில் நொறுங்குண்டு, எங்கோ அலைமோதுகிறதை அறிந்திருந்ததால்தான் அப்படிக் கேட்கிறார்! நம் எல்லோருடைய இருதயங்களிலும் இதே பிரச்சனை இருப்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நம் இருதயத்தில் இயல்பாகவே இருக்கும் வஞ்சகத்தைப் பற்றிப் பேசுவதன் மூலம் எரேமியா தீர்க்கதரிசி அதன் நிலைமையை மேலும் மோசமாக்குகிறார். நாம் மற்றவர்களிடம் பொய் சொல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம்.நம் இருதயங்கள் அந்தப் பொய்களை நம்பத் தொடங்கி இறுதியில் அதை உண்மை போலவே தோன்றச் செய்து விடுவோம். மறுபுறம், நாம் மற்றவர்களிடம் பொய் சொல்லாமல் இருக்கலாம், ஆனால் நமக்கு நாமே பொய் சொல்லிக் கொண்டிருப்போம்.
வனாந்தரம் நம் இருதயங்களை அதிகமாக வழிதவறி அலைய வைக்கின்றது. நம் வழியில் எதுவும் தடை இல்லாததால், இருதயம் நம் உணர்வுகளைப் பின்பற்றித் தானாக இயங்கும் நிலைக்குச் சென்றுவிடுகிறது. உணர்ச்சிகள் உள்ளிருப்பதை வெளியில் காட்டச் சிறந்தவை என்றாலும், அவை மோசமான இயக்குநராக இருக்கின்றன. நம் வாழ்க்கை நம் உணர்ச்சிகளால் வழிநடத்தப்பட்டால், தேவன் தாம் நமக்கு உதவி செய்ய வேண்டும். இருதயம் என்பது, நம் வாஞ்சைகள், பாசங்கள், உணர்ச்சிகள் மற்றும் உணர்வுகளின் இருப்பிடமாகும். நாம் மீண்டும் மீண்டும் பின்னடைவுகள் மற்றும் போராட்டங்களால் பாதிக்கப்படும்போது, நம் இருதயம் பழைய வழக்கங்களுக்குள்ளும், பரிமாணங்களுக்குள்ளும் சென்று விடுகிறது. நாம் உறுதியாக நின்ற காரியங்களைப் புறக்கணிக்கிறோம். "என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்" என்ற மனப்பான்மையுடன் வாழத் தொடங்குகிறோம். கிறிஸ்துவின் உண்மையான சீஷராக இருக்க விரும்பும் ஒருவருக்கு இது மிகவும் தீங்கு விளைவிக்கும்.
நம் இருதயத்தை அலைபாயாமல் காத்துக்கொள்வதற்கு அதை ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்வது அவசியம். அதாவது, நமது தொடர்ச்சியான ஏமாற்றங்களுக்கு மத்தியில் வேண்டுமென்றே சிலவற்றின் மீது பாசம் கொள்ளத் தொடங்குகிறோம். அதனால், நம் இருதயத்தின் நோக்கங்கள், திட்டங்கள் மற்றும் விருப்பங்களைக் கண்காணிப்பதில் ஒழுக்கம் தேவைப்படுகிறது. நம் இருதயத்தின் நிலை நம் வாழ்க்கைப் பாதையைத் தீர்மானிக்கிறது என்பதால் இதையெல்லாம் செய்வது அவசியம். நம் இருதயத்தில் தேவன் இருக்க வேண்டிய இடத்தை எடுத்துக்கொண்ட அனைத்தையும் நீக்கி, அங்கு தேவன் மீதான ஆழமான அன்பை வைக்கும் காலம்தான் வனாந்தரம். மோசே மீண்டும் மீண்டும் மக்களுக்கு அறிவுறுத்தியது போல, இன்றும், நம் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும், இயேசுவை முகமுகமாக சந்திக்கும் வரை, “தேவனை நம் முழு இருதயத்தோடும், முழு மனதோடும், முழு ஆத்துமாவோடும், முழு பலத்தோடும் நேசிக்க” தீர்மானிக்க வேண்டும்.
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவின் சீஷர் அனைவரும் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய ஒரு இடம், வனாந்தரம். ஆனால் அது மோசமானதல்ல. அது தேவனுடன் அதிக நெருக்கத்தையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களைப் பற்றிய அதிகத் தெளிவையும் கொண்ட இடமாக இருக்கும். இந்த வேதாகமத் திட்டம் உங்கள் வனாந்தர காலகட்டத்தின் அதிசயத்தைக் காணச் செய்யும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/christinejayakaran
