வனாந்தர அதிசயம்மாதிரி

வனாந்தரத்தை எதிர்கொள்ளுதல்
வனாந்தரம் என்பது இயேசுவின் சீஷர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது நடந்து செல்லும் ஒரு காலமாகும். நீண்ட காத்திருப்பு, மூடிய கதவுகள் மற்றும் அதிக ஏமாற்றம் கொண்ட காலம் அது. ஆனால், அது ஒரு தண்டனைக் காலம் அல்ல, வரவிருக்கும் காரியங்களுக்கான ஆயத்த காலம். தேவன் இஸ்ரவேலரை நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்தின் வழியாக அழைத்துச் சென்றார்.அதன் நோக்கம், கலகக்கார மற்றும் நம்பிக்கையற்ற ஒரு தலைமுறையினரை சீர்படுத்துவதாகும். தேவனால் பத்து நாட்களில் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அவர்களைக் கொண்டு சென்றிருக்க முடியும், என்றாலும், அவர் தம் மக்களுக்காக கவனமாகத் திட்டமிட்டு, அதை நாற்பது ஆண்டுகால மாற்றுப் பாதையாக்கினார். இந்த வனாந்தரப் பயணத்தின்போது, தேவன் ஒருபோதும் தூரமாகச் சென்று விடவில்லை.அவர்களுக்கு அருகிலும், அவர்கள் நடுவிலும் இருந்தார். மோசே மூலமாகவும், பின்னர் யோசுவா மூலமாகவும் அவர்களுடன் நெருக்கமாகத் தொடர்பு கொண்டார். அவர் அவர்களின் அன்றாட வாழ்வில் எந்த அளவுக்குத் தீவிரமாக ஈடுபட்டாரோ அதே அளவிற்கு அவர்கள் தம்மீது அசைக்க முடியாத பக்தி கொண்டிருக்கச் செய்வதிலும் ஈடுபட்டிருந்தார்.
வனாந்தரத்தின் பிரச்சனை என்னவென்றால், அதன் கடுமையான மற்றும் மாறாத வறட்சி போன்ற சூழ்நிலைகளால் அது முடிவற்றதாகத் தோன்றலாம். உறவுகளில் போராட்டம் இருக்கலாம், வழக்கத்தை விட பொருளாதாரம் இறுக்கமாக இருப்பதாக உணரலாம்.மிக நெருக்கமான இடங்களில் நீங்கள் மனச்சோர்வு மற்றும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும்போது உங்கள் உடல்நலம் கடுமையாகவும் நிலையற்றதாகவும் இருக்கும். உங்கள் சொந்த வனாந்தரப் பயணத்தை உற்று நோக்கும்போது, அமைதியான அந்தத் தருணங்களில் தேவன் இல்லாமல் இல்லை, மற்றும் உங்கள் சோதனைகளின் உச்சத்தில் அவர் தொலைவில் இல்லை, மாறாக அவர் உங்களோடு இருக்கிறார், நீங்கள் அடிபட்டு விழுவதாக உணரும்போது உங்களைத் தாங்குகிறார். "நான் உன்னை விட்டு விலகுவதில்லை, உன்னைக் கைவிடுவதும் இல்லை" என்ற தம் வார்த்தையில் அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார்.
உங்கள் வனாந்தர சுரங்கப்பாதையின் முடிவில் இருக்கும் வெளிச்சத்தை உங்களால் காண முடியாமல் போகலாம்.ஆனால் உலகத்தின் ஒளி உங்களுடன் ஒவ்வொரு அடியிலும் பயணம் செய்வதை உறுதியாக நம்பலாம். மிகத் தனிமையான தருணங்களில் உங்களுக்கான அவரது இருதயத் துடிப்பை உணருவீர்கள். ஊளையிடும் காற்று உங்களைச் சுற்றி எழும்பும்போது அவரது ஒப்பற்ற பலத்தை உணர்வீர்கள். உங்கள் மிகப்பெரிய மனவேதனைகள் மற்றும் விரக்தியின் மத்தியிலும் அவருடைய தயவைக் காண்பீர்கள்.
எனவே நம்பிக்கை இழக்காதீர்கள். நீங்கள் ஒரு வனாந்தரத்தில் இருக்கும்போது, அனைத்திற்கும் கர்த்தரானவரை நோக்கிக் கூப்பிடுங்கள். மலைகள், பள்ளத்தாக்குகள், பாலைவனம் மற்றும் தோட்டங்கள் என எல்லாவற்றிற்கும் தேவன் அவர். உங்கள் தற்போதைய காலநிலையைப் புரிந்துகொள்ள அவர் உங்களுக்கு உதவுவார்.அதே நேரத்தில் உங்களை மென்மையாகவும் அன்பாகவும் அடுத்த காலகட்டத்திற்கு அழைத்துச் செல்வார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவின் சீஷர் அனைவரும் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய ஒரு இடம், வனாந்தரம். ஆனால் அது மோசமானதல்ல. அது தேவனுடன் அதிக நெருக்கத்தையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களைப் பற்றிய அதிகத் தெளிவையும் கொண்ட இடமாக இருக்கும். இந்த வேதாகமத் திட்டம் உங்கள் வனாந்தர காலகட்டத்தின் அதிசயத்தைக் காணச் செய்யும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/christinejayakaran
