வனாந்தர அதிசயம்மாதிரி

உங்கள் மனதை அலைமோத விடாதீர்கள்
நம் போராட்டங்களில் பெரும்பாலானவை மனதில்தான் நடக்கின்றன, அவற்றில் நாம் மனதளவில் வெற்றி பெறுகிறோம் அல்லது தோல்வி அடைகிறோம். இதை நம்ப முடிகிறதா? உங்கள் வெற்றி அல்லது தோல்வியை அடைய வாயைத் திறக்கவோ அல்லது முன்பாக ஒரு அடி எடுத்து வைக்கவோ வேண்டியதில்லை. பூமியின் இருளான பகுதிகளுக்குச் செல்லவோ அல்லது உங்கள் மனதை அடக்கி, உங்கள் எண்ணங்களை உயர்ந்த ஸ்தானத்திற்குக் கொண்டு செல்லவோ, உங்கள் மனதை அலைமோத விட்டால் போதும். உங்கள் இருதயத்தில் கோபம் தானாகக் குடியேறி இருக்குமானால், உடனே உங்கள் மனம் பிறர் மீது மூர்க்கத்தையும், இழிவான அவதூறையும் அள்ளி வீசும். உங்கள் ஆத்துமாவில் தந்திரமாக வருத்தம் நுழைந்து விட்டது என்றால், உங்கள் எண்ணங்கள் அனைத்தும் அழிவுக்கேதுவாக மாறி, சுற்றிலும் இருப்பவர்களை இருளுக்குள் தள்ளிவிடும். உங்களுக்குள் சுயபரிதாபம் வந்துவிட்டால், உங்களுக்கு ஒரு தீமையும் செய்யாதவர்களிடம் கூட கசப்பையும், பதட்டத்தையும் வெளிப்படுத்துவீர்கள்.
வனாந்தரத்தைப் போல வேறு எதுவும் உங்கள் இருதயம் மற்றும் மனதின் நிலையை வெளிப்படுத்த முடியாது. உங்களைச் சுற்றியுள்ள எதிர்மறையான சூழ்நிலைகள் மனதளவில் உங்களைத் தாழ்வான பாதைகளுக்குச் செல்லத் தூண்டும், அது ஆரோக்கியமானதாக இருக்காது. அதனால் நீங்கள் தேவனையும், அவருடைய வார்த்தையையும், வாக்குத்தத்தங்களையும்,நீங்கள் யார் என்று அவர் சொல்வதையும், இந்த சமயத்தில் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதையும் சந்தேகிக்கத் தொடங்குவீர்கள். இதற்கான ஒரே தீர்வு, உங்கள்மனதை முற்றிலும் சீர்படுத்துவதுதான். சீர்படுத்துவது என்றால் என்ன? அது, உங்களைச் சற்று தாழ்த்தி, எதிர்மறையான எண்ணங்களின் மூலகாரணத்தைக் கண்டுபிடித்து, அவற்றைக் களைவதாகும். நீங்கள் சிந்திக்கும் முறையை மாற்ற, கவனமாகவும், தீவிரமாகவும் செயல்பட வேண்டும். முதலாவது, பழைய தீமையான மற்றும் மோசம்போக்கும் எண்ணங்களை நீக்கி, அந்த இடத்தில் உண்மையும் உத்தமமுமான எண்ணங்களைக் கொண்டு வர வேண்டும். இந்த எண்ணங்களைக் காண தேவனுடைய வார்த்தையைத் தேடுங்கள், அவர் உங்களை என்ன சொல்லி அழைக்கிறார், உங்களை எப்படி நேசிக்கிறார், உங்களுக்குள்ளும் உங்கள் மூலமாகவும் என்ன செய்கிறார் என்பதைக் கண்டுகொள்ளுங்கள். இதை அறிந்துகொண்டால் போதும், பழைய எண்ணங்களை விரைவில் மாற்றி புதிய எண்ணங்களைக் கொண்டு வந்து விடலாம். திகைத்துப் போன ஒருவரின் கண்ணோட்டத்தை விட்டு, மேற்கொள்ளும் ஒருவரின் கண்ணோட்டத்திற்கு மாற வேண்டும்! அப்படி உங்கள் கண்ணோட்டத்தை மாற்ற, தேவன் மீதும், அவருடைய ராஜ்யம் மற்றும் நோக்கங்கள் மீதும் முழுமையாகக் கவனம் செலுத்துவது அவசியம். அப்போது, வனாந்தரம் என்பது உங்களைப் பற்றியதோ அல்லது நீங்கள் கண்ணால் பார்க்கும் ஒன்றைப் பற்றியதோ அல்ல என்பதை உணருவீர்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இயேசுவின் சீஷர் அனைவரும் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய ஒரு இடம், வனாந்தரம். ஆனால் அது மோசமானதல்ல. அது தேவனுடன் அதிக நெருக்கத்தையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களைப் பற்றிய அதிகத் தெளிவையும் கொண்ட இடமாக இருக்கும். இந்த வேதாகமத் திட்டம் உங்கள் வனாந்தர காலகட்டத்தின் அதிசயத்தைக் காணச் செய்யும்.
More
இந்த திட்டத்தை வழங்கிய Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/christinejayakaran
