வனாந்தர அதிசயம்மாதிரி

வனாந்தர அதிசயம்

6 ல் 4 நாள்

உங்கள் கைகளை அலைமோத விடாதீர்கள்

யாக்கோபின் பதினோராம் மகனான யோசேப்புக்கும் ஒரு வனாந்தரம் இருந்தது. அவர் தன் சொப்பனங்களை காலத்திற்கு முன்னே தன் குடும்பத்தாரிடம் சொல்லிவிட்டதால், எகிப்துக்குப் போகும் வியாபாரிகளிடம் விற்கப்பட்டார். அதன் பின் போத்திபாரின் அடிமையாக இருந்த அவர், நற்பெயர் பெற்றிருந்தாலும், பாலியல் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில், பார்வோனின் அதிகாரிக்கு உதவி செய்திருந்தாலும், அவர் விடுதலை செய்யப்பட்டு பார்வோனிடம் கொண்டு செல்லப்படுவதற்கு 2 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன் பின், ஒரே இரவில் அவர் எகிப்தின் அதிபதியாக மாறினார். அவருடைய வனாந்தரம் 13 ஆண்டுகள் நீடித்தது; இருப்பினும் பாடுகள் மற்றும் தவறான புரிந்துகொள்ளல்கள் மத்தியில் அவர் தன் நோக்கத்தை விட்டுவிடவில்லை. எங்கு சென்றாலும், மற்றவருக்கு உதவி செய்ய வழி கண்டுபிடித்து, சிறந்து விளங்கினார். அதற்குக் காரணம், தேவனோடு அவருக்கு இருந்த உறவே.

நம்மில் பலருக்கு, நாம் செல்லும் வனாந்தரப் பாதை, நாம் செய்கிற அல்லது செய்ய விரும்புகிற எல்லாவற்றிலுமிருந்து சந்தோஷத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதாகத் தோன்றும். எந்தப் பலனும் இருக்கப் போவதில்லை என்பதால் எதையும் செய்வதில் ஒரு பிரயோஜனமும் இல்லை என்று நினைக்கத் தொடங்கிவிடுவோம். அந்த நினைப்பில் ஒரு பொய் இருப்பதை நீங்கள் அறிய வேண்டும். வனாந்தரத்தில் கூட, உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உண்டு. உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை முனைப்புடன் செய்வீர்கள் என்றால், உங்களால் மற்றவர்களின் வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த முடியும். எல்லா விசுவாசிகளும் வேலை செய்து சாப்பிட வேண்டுமென்று அப்போஸ்தலனாகிய பவுல் உற்சாகப்படுத்தினார். வேலை எதுவும் செய்யாமல் சோம்பேறியாக இருப்பதையும், வீண் பேச்சையும் குறித்து எச்சரித்தார். எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்காக செய்யும்படி சொன்னார். நீங்கள் செய்யும்படி அல்லது தொடர்ந்து செய்ய வேண்டுமென்று தேவன் நடத்துகிற வேலையை நிறுத்தாமலிருங்கள். உங்களுக்கு இன்னும் ஆசீர்வாதம் வந்து சேரவில்லை என்றாலும், நீங்கள் பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பதை குறைவாக மதிப்பிடாதிருங்கள். ஓய்வெடுங்கள், ஆனால் வேலை செய்ய வேண்டிய நேரத்தில் வேலை செய்யுங்கள். தேவனுடைய ராஜ்யம், உங்களால் மட்டுமே செய்ய முடியும் என்பதால், தொடர்ந்து புறப்பட்டுச் சென்று சேவை செய்வதற்கான உங்கள் அர்ப்பணிப்பை சார்ந்திருக்கிறது.

யோசேப்பின் வேலைத்திறமையும், ஒழுக்கமும் அடிமைகள் மத்தியில் அவரைச் சிறந்து விளங்கச் செய்தன. ஆழமான வனாந்தரத்தில் கூட உங்களாலும் அத்தகைய தயவையும், ஆசீர்வாதத்தையும் அனுபவிக்க முடியும், ஏனென்றால் நீங்கள் செய்யும் ஒவ்வொரு தியாகத்தையும், நீங்கள் செய்ய வேண்டிய வேலைக்காக செலுத்தும் கிரயத்தையும் தேவன் காண்கிறார்.

இந்த திட்டத்தைப் பற்றி

வனாந்தர அதிசயம்

இயேசுவின் சீஷர் அனைவரும் தவிர்க்க முடியாமல் இருக்க வேண்டிய ஒரு இடம், வனாந்தரம். ஆனால் அது மோசமானதல்ல. அது தேவனுடன் அதிக நெருக்கத்தையும், நம் வாழ்வில் அவருடைய நோக்கங்களைப் பற்றிய அதிகத் தெளிவையும் கொண்ட இடமாக இருக்கும். இந்த வேதாகமத் திட்டம் உங்கள் வனாந்தர காலகட்டத்தின் அதிசயத்தைக் காணச் செய்யும்.

More

இந்த திட்டத்தை வழங்கிய Christine Jayakaran க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.instagram.com/christinejayakaran
 

சம்பந்தப்பட்ட திட்டங்கள்