திட்ட விவரம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 3 நாள்

ஏன் நாம் சமாதானத்தை இழக்கிறோம்?



சூழ்நிலைகளை காட்டிலும் மேலோங்குகிற இந்த மேலான சமாதானத்தை நாம் ஒரே ஒரு காரியத்தால் மட்டுமே சுதந்தரிக்க முடியும் - அது விசுவாசத்தால். தேவ சமாதானத்தை நாம் அனுபவித்து வாழும் வாழ்க்கைக்கு அடித்தளமே இந்த விசுவாசம் தான். நம்மோடு கூட எப்போதும் தேவன் இருக்கிறார், அந்த சூழலிலும் அவர் நம்மை கைவிடமாட்டார், நம்மை அரவணைத்து கரம்பிடித்து நடத்துவார் என்ற ஆணித்தரமான விசுவாசமே அது. ஆனால் சில நேரங்களில் நாம் சந்திக்கிற சில சூழ்நிலைகள் இந்த விசுவாசத்தை பறித்துவிடுவதால் நாம் நம் சமாதானத்தை இழக்கிறோம். அப்படி நம்முடைய விசுவாசத்தை தளர்த்தும் சில காரியங்களை நாம் கீழே பார்ப்போம்.



1. திடீர்பயம் —சிலர் இயற்கையாகவே பயந்த சுபாவம் கொண்டவர்கள். எதற்கும் எளிதில் பயந்து பதட்டப்படுவார்கள். சிறு சிறு காரியங்களுக்கும் பயம். பயத்தை தவிர்த்து மாற்று சிந்தனை - அந்த சூழலை கையாளுவது குறித்து அவர்களுக்கு வராது. சிறு பிரச்சனையாக இருக்கும்போதே அது பெரிதாவது போல் கற்பனை செய்து அந்த கற்பனையினாலே சோகம் கொண்டு பயத்திலேயே வாழ்வார்கள்.

2. சத்துரு —பல நேரங்களில், தேவன் மீது நாம் கொண்டிருக்கிற விசுவாசத்தை கெடுப்பதற்காகவே பிசாசு சில சூழல்களை பிரச்சனைகளை கொண்டுவருவான். தேவன் நம்மோடு தான் இருக்கிறாரா என்ற சந்தேகத்தை கொண்டு வருவான். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் வேத வசனத்தை கொண்டு நாம் அவனை தைரியமாய் எதிர்க்கலாம். பிசாசுக்கு எதிர்த்து நிற்கும்போது அவன் நம்மை விட்டு ஓடிப்போவான் என்பதையே வேதமும் நமக்கு கற்றுக்கொடுக்கிறது. (யாக்கோபு :7)

3. பாவம் —சமாதானமும் கிளர்ச்சியும் முரண்பாடானவை. அவைகள் இரண்டும் ஒன்றுசேர ஒருவருக்குள் இருக்க முடியாது. இதற்கு ஒரே தீர்வு: நாம் பாவத்தை இயேசுவிடம் அறிக்கையிட்டு, பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்றுக்கொண்டு, மனம்திரும்பி வாழ அவரிடம் உதவி வேண்டுவதே. இப்படி செய்வதால், தேவ சமாதானத்தை நாம் மறுபடியும் அனுபவிக்க முடியும்.

4. உங்கள் சமாதானத்தை நீங்களே விட்டுத்தருவது —சில பிரச்சனை மிகுந்த காலங்களில், நம்முடைய சமாதானத்தை நாமே இழக்கிறோம். நம் சுயஉணர்வோடே விட்டுத்தருகிறோம். சுயஉணர்வோடே வெறுப்பை காட்டி, நம் சமாதானத்தை அசட்டைபண்ணுகிறோம். ஒன்றை மாத்திரம் நன்கு புரிந்துகொள்ளுங்கள். நம் சமாதானத்தை ஒருவராலும் பறித்துக்கொள்ள முடியாது. நாமே தான் பல்வேறு காரணங்களால் அதனை விட்டுத்தருகிறோம். நாமே விட்டுத்தருகிற ஒன்றை நாமே தான் திரும்ப எடுத்துக்கொள்ள வேண்டும்.

5. நோக்கத்தை தவறவிடல் —துற்செய்திகளை கேட்கும் போது நாம் அவைகளால் அடித்துச்செல்லபடுகிறோம். அப்படி உணர்வுகளால் நாம் இழுப்புண்டு போவதினால், நம் வாழ்வின் முக்கிய நோக்கத்தை மறக்கிறோம். தேவனை மாத்திரம் நோக்கி, நம் பயணத்தை நாம் தொடரும்போது, நம்மை சுற்றிலும் நடக்கும் எதிர்மறையான காரியங்களால் நம் சமாதானத்தை பறித்துக்கொள்ள முடியாது. நம்முடைய சிந்தையை துற்செய்திகளால் சோகத்திற்கு இழுப்புண்டு போகாமல், நோக்கத்தை விட்டு மாறவிடாமல் நாம் தான் காத்துக்கொள்ள வேண்டும்.

தேவன் எப்போதும் நம்மோடு கூட இருப்பதால், நாம் சந்திக்கிற பிரச்சனைகளில் நாம் மூழ்கப்போவதோ, தோற்கப்போவதோ இல்லை. பிரச்சனைகளை எதிர்த்து போராட, எதிர்நீச்சல் போட தேவையான பெலனை சத்துவத்தை சிலுவையில் இயேசு நமக்காக சம்பாதித்து தந்திருக்கிறார். இந்த பிரச்னைகளெல்லாம் காரணங்களோடு அனுமதிக்கப்படுகின்றன. காற்றோடு காற்றாக பறக்க போகும் பிரச்சனைகளை கண்டு நாம் மனம் துவள வேண்டாம். உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக (யோவான் 14:27). தேவன் தருகிற மேலான சமாதானத்தை பற்றிக்கொள்ளுங்கள். அவர் நம்மை காண்கிற தேவன். நம்மை விடுவிப்பதற்கும் வழிநடத்துவதற்கும் அவர் போதுமானவர் என்பதை என்றும் நினைவில் கொண்டு விசுவாசத்தில் உறுதியாக நில்லுங்கள்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முட...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்