திட்ட விவரம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 5 நாள்

உங்கள் எண்ணங்கள் எப்படி உங்கள் சமாதானத்தை பாதிக்கிறது



நேர்மையாக சொல்லவேண்டுமானால், நம்மில் அநேகர் நம்மை குறித்து தவறான ஒரு அபிப்பிராயமே கொண்டிருக்கிறோம். நாம் யாரென்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோமோ அது நாம் அல்லவே. நம்மை குறித்து நாமே மாற்றிக்கொள்ளவேண்டிய காரியங்கள் அதிகம்.



இது உண்மையா என்பதை நாம் எப்படி அறிந்துகொள்வது? என்னுடைய போதக ஊழியத்தின் பல ஆண்டுகள் அனுபவத்திலிருந்து சொல்லவேண்டுமானால், "மனம் புதிதாகுதல்" என்று வேதம் போதிக்கிற ஒரு காரியம் மிகவும் முக்கியம். நம்முடைய பழைய சிந்தனை முறைகள், பழைய நம்பிக்கைகள், பழைய பழக்கவழக்கங்கள், பழைய குணநலன்கள் ஆகியவற்றை நாம் புதிதாகிற அனுபவத்திற்காக தேவனிடத்தில் அர்ப்பணிக்க வேண்டும். இந்த புதிதாகிற அனுபவம் நம் அனுதின வேத தியான வாழ்க்கையை பொறுத்தே அமையும். வேதம் சொல்கிறது, "நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்." (ரோமர் 12:2).



நம் மனம் புதிதாகி நமது எண்ணங்கள் மாறும்போது தான், நம் பேச்சும் நடந்துகொள்ளும் முறையும் மாற்றங்களுக்குள் வரும். நமது பேச்சும் நாம் நடந்துகொள்ளும் முறையும் மாறும்போது தான் நமது உறவுமுறைகள் நல்ல மாற்றங்கள் அடையும். நம் உறவுகள் சீராக மாறுவது தான், நம்மை சுற்றிய நமது உலகத்தையே மாற்றும். இந்த மாற்றங்கள் அனைத்தின் ஆரம்பமே, எண்ணங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான்.



நீங்கள் எப்படிப்பட்ட எண்ணங்களை கொண்டிருக்க விரும்புகிறீர்கள் என்பது உங்களது முடிவை பொறுத்ததே. எந்த நேரத்திலும் உங்கள் எண்ணங்களை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும். ஒரு வேலை செய்துகொண்டிருக்கும்போதே, இன்னொரு வேலைக்கு உங்கள் எண்ணத்தை கொண்டுசெல்ல உங்களால் முடியும். எதிர்மறையான சிந்தனைகளுக்கு இடம்கொடாமல், சமாதானத்திற்கேதுவானவற்றை சிந்திக்க உங்கள் எண்ணத்தை திசைதிருப்பவும் உங்களால் முடியும். பாவத்திற்கு தூண்டும் காரியங்களுக்கு உங்கள் சிந்தையில் இடம்கொடுக்காமல், அந்த எண்ணத்தையே மறுத்துவிடவும் உங்களால் முடியும். எந்த சூழலிலும், "நான் தேவனை நம்பி சார்த்திருக்கவே விரும்புகிறேன்" என்று முடிவெடுக்கவும் முடியும்.



இந்த உலகத்தின் வழிகளுக்கு மாறாக உங்கள் எண்ணங்களில் நீங்கள் எடுக்கிற ஒரு உறுதியான நிலைப்பாடு, அவைகளிலிருந்து உங்களை தப்புவிக்கும் வழியை உங்கள் முன் உண்டுபண்ணும். பிரச்சனையிலிருந்து உங்கள் எண்ணங்களை வேறொரு காரியத்திற்கு திசைதிருப்ப தேவன் உங்களுக்கு பெலன் தருவார். இது தான் தேவனுக்கேதுவாக உங்கள் எண்ணங்களை கட்டுப்படுத்தும் முதல் படி.



உங்கள் சிந்தையை நீங்கள் பாதுகாப்பதே, உங்கள் சமாதானத்தை காத்துக்கொள்ளும் முறை. எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரத்தையும் ஜெபத்தையும் தேவனுக்கு ஏறெடுப்பதே நம் ஆழ்மனதில் தேவ சமாதானத்தை நிலைகொள்ள செய்யும் (பிலிப்பியர் 4:6-7). உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவைகளெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவைகளோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைகளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித்துக்கொண்டிருங்கள் (பிலிப்பியர் 4:8).



உங்களால் ஒருபொழுதும் தேவனுடைய நன்மையையும் வல்லமையையும் சிந்திக்கும் திறனை இழக்கமுடியாது. இயேசுவை போலவே வாழ்க்கையை எதிர்கொள்ள பழகுங்கள். உங்கள் ஜெபவாழ்வை காத்துக்கொள்ளுங்கள். உங்கள் சிந்தையை காத்துக்கொள்ளுங்கள். தேவனையும் தேவனுக்கேற்றவைகளையும் மட்டுமே உங்கள் வாழ்வின் மையமாக வையுங்கள். இவைகளின்படி உங்கள் சிந்தையை நீங்கள் நிரப்பும்போது, பிலிப்பியர் 4:9-ன் படி சமாதானத்தின் தேவன் உங்களோடிருப்பார்.


நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முட...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்