திட்ட விவரம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 8 நாள்

பிறருடன் சமாதானமாக வாழ்வது



நாம் ஒவ்வொருவரும் கிரமமாக சந்திக்கும் சவால் இது: ஒரு சச்சரவு ஏற்படும்போது எப்படி நாம் பிறருடன் சமாதானமாக இருப்பது?



உண்மையென்னவென்றால், தேவன் நாம் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக வாழவேண்டும் என்று விரும்புகிறார். நாம் எப்போதும் ஒருவரோடு ஒருவர் சமாதானமாக இருக்கமாட்டோம் என்றும் அவர் அறிந்திருக்கிறார். பிரச்சனைகள் வரும். சில வேளைகளில் பிரச்சனைகள் எளிதாக தீருவது இல்லை. உண்மையில் சொல்லப்போனால், பிரச்சனைகள் தீர முடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். ஆனால், தேவன் நாம் மற்றவர்களோடு சமாதானமாக இருக்க நம்மாலான எல்லாவற்றையும் செய்ய விரும்புகிறார்.



கிறிஸ்துவை பின்பற்றுகிற நம் வாழ்வு தேவனின் கட்டுப்பாட்டில் இல்லை என்றால் நாம் அவிசுவாசிகளைப்போல் வெறுக்கத்தக்க விதத்தில் நடப்போம் என்று அறிந்திருக்கிறோம். நம்முடைய இரட்சிப்பு தானாகவே நம்மை இழிவு, பொறாமை, கோபம், வெறுப்பு போன்ற நிலைகளில் இருந்து நம்மை காப்பதில்லை. நம்முடைய ஒவ்வொரு உறவிலும் பூமியில் அவருடைய பிரதிநிதிகளாக இருக்க வாஞ்சித்து, பரிசுத்த ஆவியானவர் நம்மிலும் நம்மூலமாகவும் கிரியை செய்ய அழைத்து, நம்முடைய சுபாவத்தை அவருக்கு ஒப்புக்கொடுக்கும்போதுதான், நாம் பெருமையிலிருந்து சமாதானத்திற்குள்ளாக செல்வோம்.



பிரச்சனை ஏற்படும்பொழுது எப்படி நாம் அதை சமாளித்து சமாதானமான தீர்வை எட்டுவது?



முதலாவது, ஒரு உறவின் மதிப்பை உணர்ந்துகொள். மற்ற நபர் ஒருவரோடு நீ சமாதானமாக வாழப்போகின்றாய் என்றால், "இந்த உறவு நான் காக்கவேண்டிய மதிப்பு மிக்கது தானா? நான் இந்த உறவில் நிலைக்க மற்ற காரியங்களை விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறேனா?" என்று நீ முடிவு எடுக்க வேண்டும். தேவனுடைய கிருபையால் இரட்சிக்கப்பட்ட இருவர் ஒரு உறவை மதித்தால் நிச்சயம் அந்த உறவில் உண்மையான சமாதானத்தை பெற்றுக் கொள்ளமுடியும் என்று நான் நம்புகிறேன்.

இரண்டாவதாக, பேசுங்கள் … பேசிக் கொண்டே இருங்கள். இருவர் பேசினால்—பேசிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்க மனதாக இருந்தால்—அவர்கள் தம் பிரச்சனைகளை சீக்கிரம் தீர்த்து சமாதானமாக வாழ்வது அதிக சாத்தியமாகும்.

மூன்றாவது, வெளிப்படையாக இருங்கள். நீ ஒரு மறைக்கப்பட்ட திட்டத்தையோ அல்லது கையாள்கைத் திட்டத்தையோ மனதின் பின்னாக வைத்திருந்தால் சமாதானமான உறவை எதிர்பார்க்கமுடியாது. ஒருவரோடு ஒருவர் பிரச்சனை ஏற்படும்பொழுது நீ வெளிப்படையாகவும் உண்மையாகவும் இருந்தால் உறவுகளில் சமாதானமான முடிவுகளை எட்ட முடியும்.

முடிவாக, பிரச்சனையின் உள்ளான காரணத்தை ஆராய்ந்துபார். நீ மற்றவர்களோடு வெளிப்படையாக பேசி, உண்மையான பிரச்சனையின் காரணத்தை ஆராய்ந்து பார்த்தால், எந்த பிரச்சனையையும் வென்று சமாதானத்தை அடைய உன்னால் முடியும்.

நீ தேவனுடைய வார்த்தையின் சத்தியத்தில் நின்று மற்றவர்களோடு சமாதானத்தை தேடினால் தேவன் உன்னோடு நிற்கிறார் என்பதை நினைவில் கொள். அவர் நீ சந்திக்கும் எந்த பிரச்சனை அல்லது ஒடுக்குதலையும் உன்னுடைய நித்திய மேன்மைக்காக மாற்றுவார். அவர் உனக்குள்ளாக ஆவிக்குரிய வளர்ச்சி, அதிக விசுவாசம் மற்றும் இன்னும் அதிக வல்லமையை கொடுப்பார். 


வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முட...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்