திட்ட விவரம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 1 நாள்

அனைத்து வித சமாதானத்தின் மூலதளம்


ஒரு சொற்பொழிவிற்கு சற்று முன்பு, நானும் ஒரு ஊழியரும் மேற்கு கடற்கரையில் உணவு உட்கொண்டிருந்தோம். அப்பொழுது அங்கு எங்களுக்கு உதவிய உணவகப் பணியாளர் ஒரு இளம் பெண். நான் அவளிடம் "நீ கடவுளிடம் எதை வேண்டுமானாலும் உன் வாழ்க்கைக்காக கேட்க கூடும் எனில், எதை கேட்பாய்?" என்றேன்.



அதற்கு அவள் சிறிதும் தயக்கமின்றி "நான் சமாதானத்தை கேட்பேன்" என்றாள்.



அவள் தன் பாட்டி சில நாட்களுக்கு முன்பு இறந்ததை எங்களுடன் பகிர்ந்து கொண்ட போது அவள் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தோடியது.



அவள் வாழ்க்கையின் கதையை கேட்ட பின்பு, அவள் குடும்பத்தில் அவள் உட்பட யாரும் தேவனை விசுவாசிக்கவில்லை என்பதை அறிந்துக்கொண்டேன். அவள் தேவனை முழு மனதுடன் நிராகரிக்கவில்லை. அவளுக்கு தெரிந்ததெல்லாம் அவளுக்குள் எங்கோ ஒரு ஆழமான மனக்கலக்கம் உண்டு என்பதுதான், ஆனால் அவளின் மனக் கொந்தளிப்பை சரி செய்யவோ அதின் வேர் என்ன என்று அறிந்து கொள்ளவோ அவளுக்கு போதுமான புரிதல் இல்லை. பலரை போல, அவளும் தன் அன்றாட வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருந்தாள் பெரிய நோக்கமோ அதீத அர்த்தமோ அவள் வாழ்க்கையில் இல்லை.



இந்த இளம் பெண் இன்று நம் சமுதாயத்தில் உள்ள பலரின் பிரதிநிதியாக இருக்கிறாள் - இயக்கங்கள் வழியாக சென்று கொண்டும், தேவைகளைப் பூர்த்தி செய்ய முயன்றுக்கொண்டும், இல்லாத வழியை தேடிக்கொண்டும், எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முயன்று கொண்டும் இருக்கிறார்கள்.



அநேக நேரங்களில், நாம் ஏன் வெறுமையையும் அமைதியின்மையையும் உணர்கிறோம் என்ற கேள்விக்கு, நம் மன குழப்பங்களுக்கு போதிய பதில் இல்லாததைப் போல தோன்றும். மேலும், நம்மால் இயன்றதை செய்தும் நாம் என் வாழ்க்கையில் துன்பங்களுடன் போராடுகிறோம் என்பதற்கான காரணம் திருப்திகரமானதாக இல்லாதது போல் தோன்றும்.



அந்த இளம் பெண் அவளின் நிலைமையை "எனக்கு சமாதானம் வேண்டும்" என்று கூறி விவரித்தாள். வேறு சிலர் "நான் தனிமையை உணருகிறேன்" என்பர். மேலும் சிலர் "என் கணவரோ அல்லது மனைவியோ என்னை நேசிக்க வேண்டிய விதத்தில் நேசித்தால், நான் சந்தோசமாக இருப்பேன்" என்பர். ஒரே கோட்பட்டின் வெவ்வேறு பரிமாணங்கள்: "ஏதோ ஒன்று சரி இல்லை... நான் சந்தோசமாக இல்லை. எனக்கு சமாதானமே இல்லை. என்னிடம் என்ன குறை உள்ளது?"



இன்றைய மதச்சார்பற்ற சமுதாயத்தின் பேச்சை கேட்டு பாதிக்கப்பட்ட பலர் இந்த வெறுமையை உணருகின்றனர் மேலும் அவர்கள் தங்களின் பிரச்சனைகளை தேவனோடு சமன் செய்வதில்லை. நாம் தொடர்ச்சியாக இச்சமுதாயத்தின் கூற்றுக்களால் தாக்கப்படுகிறோம்: “நீ ஒல்லியாக இருந்திருந்தால், நீ சற்று அழகிய உடை அணிந்தால், நீ ஒரு ஜாகுவார் கார் வைத்திருந்தால், நீ நகரத்தின் ஒரு சிறந்த பகுதியில் வாழ்ந்தால், நீ இன்னும் அதிகம் சம்பாதித்தால்...” போன்ற பட்டியலுக்கு முடிவே இல்லை. அனால் இந்த பட்டியலில் உள்ளவைகளுட்பட நூற்றுக்கணக்கான விலையுயர்ந்த பதில்களால் நாம் வாஞ்சிக்கும், நிரந்தர திருப்திகரமான தீர்வை தர இயலாது.



அந்த இளம் பெண் சரியாக சொன்னாள்: நம்மில் அநேகருக்கு இன்னும் ஏதோ ஒன்று வேண்டும் என்ற எண்ணம் உண்டு. அவை அனைத்தையும் உள்ளடக்கிய ஒரே சொல் சமாதானம்.



ஆறு வருடங்களுக்கு மேல் போதகராய் இருக்கும் ஒருவராக கூறுகிறேன், நீங்கள் தேவனுடன் சமாதானம் அடையும் வரை, இந்த வாழ்க்கையில் நீங்கள் ஒருபோதும் மெய்யான சமாதானத்தை அனுபவிக்க மாட்டீர்கள்.


வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முட...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்