திட்ட விவரம்

சமாதானத்தை கண்டுக்கொள்வோம்மாதிரி

Finding Peace

17 ல் 7 நாள்

கவலையை விட்டுவிடுங்கள்



கவலைப்படுவதென்பது நம் அனைவருடைய வாழ்க்கையிலும் வருகின்ற ஒன்று தான். இயேசு மலை பிரசங்கத்தில் கூறியதை நினைவுபடுத்துகிறேன்:



ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா? ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? மத்தேயு 6:25‭-‬26

இந்த வேத பகுதியில் 'கவலை' என்ற வார்த்தைக்கு கிரேக்க மொழியில் கொடுக்கப்பட்டிருக்கிற வார்த்தையின் அர்த்தம் - கவனச்சிதறல். நிச்சயமில்லாத ஒன்றை குறிக்கிற வார்த்தை அது. கவலை நமக்கு விளைவிப்பதும் அது தான். அடுத்து என்ன நடக்குமோ என்ற ஒரு பயத்தை, பதட்டத்தை அது நமக்குள் உருவாக்கும். நிச்சயமில்லாத வாழ்வில் நாம் பயணிக்கிறோம் என்ற சிந்தையை அது நமக்கு கொடுக்கும்.



அநேகருக்கு கவலைப்பட்டு கலங்குவதே அன்றாட வாழ்க்கையாகிவிட்டது. நீங்கள் அப்படிப்பட்ட ஒரு நபராக இருந்தால், மேலே நாம் வாசித்த இயேசுவின் வார்த்தைகளை மீண்டும் ஒருவிசை வாசியுங்கள். கவலைபடாதிருங்கள் என்பது நமக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனை அல்ல, கட்டளை.



"என்னால் கவலைகொள்ளாமல் இருக்க முடியவில்லை. கவலையால் ஆட்கொள்ளப்பட்டே நான் பழகிவிட்டேன்" என்று ஒருவேளை நீங்கள் சொல்லலாம். அநேகர் இதை என்னிடம் சொல்லி இருக்கிறார்கள். நான் அவர்களுக்கு எப்போதும் கூறும் பதில், "இல்லை, உங்களால் முடியும்" என்பதே.



நமக்குள் கவலையை நம்மை எதிர்கொள்ளும் சூழ்நிலை உருவாக்காது. அந்த சூழ்நிலையை நாம் எதிர்கொள்ளும் விதமே உருவாக்குகிறது. எப்படி எதிர்கொள்கிறோம் என்பது உங்களின் தெரிந்தெடுப்பு. தெரிந்தெடுக்கும் மனநிலை தேவன் மனிதகுலத்திற்கு கொடுத்த மிகப்பெரிய ஆசீர்வாதங்களில் ஒன்று. நீங்கள் எவ்வாறு யோசிக்க வேண்டும், எப்படி காரியங்களை எதிர்கொள்ள வேண்டும் எல்லாமே உங்களுக்கு தெரிந்தெடுக்கும் ஆளுகைக்கு உட்பட்டவை. எனவே, நீங்கள் கவலை கொள்ளுவது ஒருபோதும் தேவனின் சித்தம் அல்ல. நீங்கள் கவலை கொள்ளவேண்டும் என்பதற்காக அவர் உங்கள் வாழ்வில் எந்த சூழ்நிலையையும் அனுமதிப்பது இல்லை. சில நேரங்களில் உங்கள் விசுவாச பெலத்தை அதிகரிப்பதற்காக தேவன் சில கடினமாக சூழ்நிலைகளை அனுமதிக்கிறார்.சில மோசமான பழக்கங்களை உங்களை விட வைப்பதற்காகவோ, நீங்கள் இன்னும் முதிர்ச்சி பெறுவதற்காகவோ தேவன் அனுமதிக்கலாம். ஆனால் ஒருபோதும் உங்களுக்கு கவலைக்குள் தள்ளுவதற்கு தேவன் அவைகளை அனுமதிப்பது இல்லை. தேவனுக்குள்ளாக உங்கள் விசுவாசமும் கீழ்ப்படிதலும் அதிகரிக்கும்வண்ணமாகவே தேவன் செயல்படுகிறார். அதன் முடிவு, உங்களுக்கு மிகுந்த ஆசீர்வாதமாகவே இருக்கும்.



பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது உங்கள் தெரிந்தெடுப்பை பொறுத்தது. கவலைக்குள்ளாக்கும் காரியங்களால் இழுப்புண்டு நீங்கள் துவண்டும் போகலாம். அல்லது தேவனிடம் சென்று, "தகப்பனே, இந்த காரியத்தை உம் சமூகத்தில் கொண்டு வருகிறேன். இது எனது பெலத்திற்கு மிஞ்சினதாக இருக்கிறது. என்னால் இதை சமாளிக்க முடியவில்லை. ஆனால், நீர் சர்வ வல்லவர். உம்மால் மாத்திரமே இதிலிருந்து என்னை விடுவிக்க முடியும். இதை எதிர்கொள்ளுவதற்கேற்ற ஞானத்தை எனக்கு தாரும். எனக்கு நன்மைக்காகவே நீர் சகலமும் செய்கிறவர் என்று விசுவசிக்கிறேன். உம் பரிபூரண சித்தத்திற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். உம்முடைய அன்பையும், ஞானத்தையும், வல்லமையையும் நீர் எனக்கு வெளிப்படுத்துவதற்கு நீர் எடுக்கிற ஒவ்வொரு முயற்சிகளுக்கும் என்னை ஒப்புக்கொடுத்து ஜெபிக்கிறேன்" என்று தேவனின் உதவியையும் நாடலாம்.



நண்பரே, நீங்கள் கவலைகளை மறந்து சமாதானத்தை சுதந்தரித்து அனுபவிக்க இதுவே வழி.

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Finding Peace

உங்கள் வாழ்க்கையில் மேலும் சமாதானம் வேண்டுமா? நீங்கள் விரும்பும் அமைதி உங்கள் வாழ்வில் நிலை பெற வேண்டுமா? நீங்கள் மெய்யான சமாதானத்தை பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், நீங்கள் அதை தேவனிடத்திலிருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள முட...

More

இந்த திட்டத்தை வழங்கிய "இன் டச்" ஊழியங்களுக்கு எங்கள் நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு: https://intouch.cc/peace-yv

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்