திட்ட விவரம்

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்மாதிரி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

7 ல் 7 நாள்

உம்முடைய கணம் மற்றும் மகிமைக்காக


நம்முடைய வாழ்க்கையை இயேசுவினிடம் அர்ப்பணிப்பது ஒரு பரிபூரணத்தின் சபதம் அல்ல; அது விசுவாசத்தின் அறிக்கையாகும். அது நம்முடைய வாழ்வில் ஒரு சிறு தருணம் மாத்திரம் அல்ல. அது அவருடைய திட்டம் மற்றும் சித்தத்திற்கு நம்முடைய சிந்தனைகள், உணர்ச்சிகள்,மற்றும் விருப்பங்களை தினசரி படைப்பாக்குவதற்கான நமக்கான சீரமைப்பும் மறுசீரமைப்புமாகும். இயேசுவோடு கூடிய உறவில், பாதையின் ஒவ்வொரு அடியிலும் அவரை பின்பற்றி செல்லும் ஒரு பிரயாணமே வாழ்க்கை. நாம் விடுதலைப்பெற்று கனிகொடுக்கும் வாழ்க்கையை தொடர்ந்து ஒவ்வொருநாளும் அவரைப் பின்பற்றுவதிலிருந்து அனுபவிக்கிறோம்.


இயேசுவைப் பின்பற்ற கற்றுக்கொள்வதற்கு முயற்சியும் பயிற்சியும், எந்த ஒரு புது விஷயத்தை கற்றுக்கொள்வதற்கும் எப்படி தேவையோ அதுபோலவே தேவை. ஒவ்வொரு நாளையும் ஒப்படைப்பின் ஜெபத்தோடு துவங்குவது நம் இருதயத்தை தேவனின் சித்ததோடு ஒத்திசைக்க ஒரு நல்ல வழியாகும்.. திசைதிருப்பப்பட்டு நாம் எங்கிருக்கிறோம் அல்லது எவ்வாறு மீண்டும் சரியான பாதையை அடைவது—என்றெல்லாம் சிந்திக்கும்படி நம்முடைய ஆவிக்குரிய பிரயாணத்தில் தொலைந்து போவது எளிதான ஒன்று. நாம் பல்வேறு காரணங்களால் தொலைந்தோ அல்லது சிக்கிக்கொண்டோ இருக்கலாம், அதனால் பாதையை மீண்டும் வந்தடைய எளிமையான வழி ஒன்று நமக்கு தேவை. சில மக்கள் அடுத்த தேவாலய ஆராதனையில் அல்லது வேத ஆய்வில் அது நடப்பதற்காக காத்துக்கொண்டிருப்பார்கள். சிலநேரம் அதற்கு நெருக்கடி ஒன்று தேவைப்படும். ஆனால் நாம் நமது பிரயாணத்தில் மறுசீரமைத்துக்கொள்ள காத்துக்கொண்டிருக்க வேண்டாம்.


இதோ நமது இருதயத்தை மீண்டும் சீராக்க தினசரியான மற்றும் எளிமையான வழி. நீங்கள் ஏதாவது ஒருவகையான விளையாட்டை விளையாடியிருந்தால், அதில் ஒவ்வொன்றிலும் ஒரு "தயார்" அல்லது தொடக்க நிலை இருப்பதை அறிவீர்கள். அதுவே அடுத்து வரும் விளையாட்டின் முக்கியமான துவக்க நிலை. எடுத்துக்காட்டாக, கூடைப்பந்தில் தயார் நிலையை மூன்றச்சுறுத்தல் நிலை என்று கூறுவார்கள். அத்தகைய நிலைப்பாட்டிலிருந்து, உங்களால் பந்தை கடத்துவது, எறிவது அல்லது பந்தோடு நகர்வது போன்றவற்றை எளிதாக செய்யமுடியும். சுருக்கமாக, அடுத்து செய்யக்கூடிய சிறந்த நடவடிக்கையை நிகழ்த்த நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்று கூறலாம்.


இந்த ஜெபத்தை உங்கள் தினசரி பயணத்தின் தயார் நிலையென நினைத்திடுங்கள் . உங்களிடம் இயேசு இந்த நாளில் கேட்குமெந்த—போவது,செய்வது,பேசுவது அல்லது கொடுப்பது போன்ற செயல்களையும் செய்ய, உங்களுடைய சுய பலத்தில் மிகவும் பிரயாசப்படாமல் உங்களுக்குள் வாசமாயிருக்கும் பரிசுத்த ஆவியானவரை சார்ந்து செய்ய உங்களை அற்பணிக்கும் ஆவிக்குரிய நிலை இது.


உங்களை அவர் நடத்தும் எந்த ஒரு வழியிலும் இன்று உங்களுடைய இருதயம் அவருடையதுடன் சீராகி, உங்களுடைய கண்கள் அவரில் நோக்கமாகி, உங்களுடைய கால்கள் அவரை தொடர தயாராகி, உங்களுடைய கைகள் அவருக்கு ஊழியம் செய்ய ஜெபம் ஒரு எளிமையான வழியாகும். 


இதற்கு முன் நீங்கள் செய்யாவிட்டாலும், நீங்கள் இயேசுவின் முன் பணிந்து, நீங்களுங்களை அற்பணிப்பதாக கூறுவீர்களா, மேலும் பரிசுத்த ஆவியானவரின் வல்லமையோடு அவருடைய கணம் மற்றும் மகிமைக்காக நீங்கள் சென்றும், செய்தும், பேசியும், கொடுக்கவும் செய்வீர்களா?  


இப்போது, இதை அவரிடம் அர்ப்பணிக்கும் தினசரி பயிற்சியாக்குங்கள். மேலும் ஏன் உங்களுடைய இந்த முடிவை உங்கள் நண்பரிடம் பகிர்ந்து கொண்டு அவரையும் இதுபோல செய்ய ஊக்குவிக்கக்கூடாது.. 


இயேசுவினிடம் அர்பணித்தலில் ஆழமாக சென்று இந்த 7 நாள் பிரயாணத்தை முடித்ததற்காக உங்களுக்கு வாழ்த்துக்கள்! இந்த ஜெபத்தை குறித்து மேலும் அறிந்து கொள்ளவும் இயேசுவின் அர்பணிப்பில் எப்படி நடப்பது என்று அறிந்துகொள்ளவும் உங்களுக்கு விருப்பமென்றால்,  http://crustore.org/go-do-say-give.html என்ற இணைப்பில் கிடைக்கும் “Go Do Say Give” என்ற இந்த புத்தகத்தில் மேலும் சிந்தனைகள் உள்ளன அல்லது  http://KeithBubalo.com 

என்ற இணைப்பில் என் வலைப்பதிவிற்கு செல்லவும்
நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Cruக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://keithbubalo.com ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்