திட்ட விவரம்

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்மாதிரி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

7 ல் 6 நாள்

நான் என்ன கொடுக்க வேண்டுமென்று நீர் விரும்புகிறீரோஅதையே நான் தருவேன்


கர்த்தர் உலகை மிகவும் நேசித்ததினால், உலகத்தின் ரட்சிப்புக்காக தம்முடைய ஒரே பேரான குமாரனை கொடுத்தார். தேவ ஜனத்திற்கு கொடுப்பது என்பது கர்த்தருடைய இருதயத்தில் உள்ள காரியமாகும். தேவ அன்பும், கொடுப்பதும் மிகவும் பின்னிப் பிணைந்துள்ளது, ஒன்றில்லாமல் ஒன்றைப் பற்றி யோசிக்க இயலாது. இயேசுவைப் பின்தொடர்வதால், நாம் இதற்கு முன்பு அறியாத இடங்களிலும் நம்மை கொடுக்க வைக்கும்.


பணம் நம்மை காந்தகம் போல் இழுக்கும் என்று இயேசு நன்கு அறிந்து, ஒரு அருமையான செய்தியைக் நமக்கு கொடுத்து இருக்கிறார்: “இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ்செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து, மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால் கூடாது.”(மத்தேயு 6: 24). நமக்குள் இருக்கும் தீவர பணத் தேடலின் குணம் நாம் தேவனை பின்பற்றுவதைத் முழுவதுமாக தடுத்துவிட கூடும்.


இந்த பலம் வாய்ந்த பண ஈர்ப்பை நாம் எப்படி மேற்கொள்வது? அதே பணத்தை கொடுப்பதன் மூலம். நம் ஜெபத்தின் மற்ற அம்சங்களைப் போலவே, இதுவும் இறுதியில் நம் இதயத்தை சார்ந்த ஒரு விஷயமாகும். பணம் வைத்திருப்பது ஒரு தவறு என்று ஒருபோதும் சொல்லப்படவில்லை ஆனால் பணத்தின் மீதான அன்பு தான் பிரச்சினை. உண்மை என்னவென்றால் நம்மிடம் உள்ள அனைத்தும் அவருக்கு சொந்தமானது. அவருடைய பெயரை கனம் செய்யும் விஷயங்களில் பயன்படுத்த, தேவராஜ்ய சொத்துக்களின் மீது குறுகிய கால உரிமை நமக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, நாம் விரும்பியதைச் செய்வதற்கு நம்மிடம் உள்ள எதுவுமே நம்முடையது அல்ல.


இஸ்ரவேல் மக்கள் நாற்பது ஆண்டுகளாக வனாந்தரத்தில் அலைந்து திரிந்தபோது அவர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது என்னவென்றால், வானத்திலிருந்து தினசரி மன்னா வழங்குவதாக கர்த்தர் அளித்த வாக்குறுதியை தேவன் உண்மையாகக் கொண்டிருந்தார். நம்முடைய அன்றாட அப்பத்திற்காக நாம் ஜெபிக்கும்படி இயேசு உபதேசிக்கிறார். தேவன் தம் மக்களைக் கவனித்து வருகிறார். நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் அவருடைய அன்பான ஏற்பாட்டை நாம் அனுபவிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த அனுபவம் நம்மை அவருக்கும் மற்றவர்களுக்கும் மகிழ்ச்சியுடன் கொடுக்க தயார் படுத்தும். நாம் கொடுத்து உதவ வேண்டியது நம் பணத்தை மட்டுமல்ல, நம் வாழ்க்கையையும் சேர்த்தே.


ரோமர் 12: 1 இவ்வாறாக கூறுகிறது, ".அப்படியிருக்க, சகோதரரே, நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்; இதுவே நீங்கள் செய்யத்தக்க புத்தியுள்ளஆராதனை." இது பழைய ஏற்பாட்டின் தியாக அமைப்பில் உள்ளது. நாம் சம்பாதிக்கும் பணம் உட்பட, நம்முடைய முழு வாழ்க்கையையும் பலிபீடத்தின்மீது தேவனுக்கு முன்பாகக் கொடுக்க வேண்டும்.


தாராளமாக கொடுக்கும் பண்பு தேவனுக்கு நன்றி செலுத்தும் இதயங்களிலிருந்து பாய்கிறது. நிதி அல்லது உங்கள் நேரத்தின் மூலம் உதவ தேவன் உங்கள் இதயத்தில் தூண்டும் ஒரு காரணத்தை அல்லது நபரைக் கருத்தில் கொள்ள சிறிது நேரம் ஒதுக்குங்கள்.


இன்று நீங்கள் கொடுக்க தேவன் விரும்புவதை நீங்கள் தருவீர்களா?


நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Cruக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://keithbubalo.com ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்