திட்ட விவரம்

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்மாதிரி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

7 ல் 4 நாள்

நான் என்ன செய்ய நீர் விரும்புகிறீரோ அதை நான் செய்வேன்



தேவன் நாம் செய்ய விரும்புகிறதை செய்வது மிக அரிதாக தோன்றலாம். எதோ நம்மால் செய்து முடிக்க முடியாத செயல்களின் எல்லையில்லா பட்டியலை நம்மிடம் நீட்டுவதற்கு நம்மை அழைப்பதை போல தென்படலாம். நாம் செய்ய வேண்டியவை எத்தனை உள்ளன? இயேசுவின் அனைத்து கட்டளைகளையும் கீழ்படிய நாம் எங்கே தான் துவங்குவது?



நற்செய்தி நூல்களில் ஒரு காரியம் தெளிவாக இருக்கிறது. பரிசேயரிடம் மக்கள் உணர்ந்தது போல இயேசுவிடம் உணரவில்லை. பரிசேயர்கள் நீதியை குழப்பமானதாகவும், அடையக்கூடாத ஒன்றாகவும், ஏன் விரும்பத்தகாததாகவும் கூட செய்தனர். மலைப்பிரசங்கத்தில் இயேசு எல்லாவற்றையும் எளிதாக்குகிறார். நாம் செய்ய வேண்டியதின் சாரம்சத்தை ஒரு வரியில் இயேசு சுருக்கிவிட்டார்: "ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிராணமும் தீர்க்கதரிசனங்களுமாம்."
(மத்தேயு 7:12) 



இது உங்களுக்கு அச்சுறுத்துவதாக தோன்றலாம், அனால் இன்றைய நாளை சற்று சீர்தூக்கி பாருங்களேன். உங்கள் பணியை செய்கையில் பல விதமான மக்களை ஒரு வேளை நீங்கள் சந்திக்க நேரும், அல்லது வகுப்புகளில் கலந்துக்கொள்வீர்கள், அல்லது உங்கள் குடும்பத்தை கவனிப்பீர்கள், அல்லது சில வேலைகளை செய்து வாழ்க்கையில் பொதுவான அலுவல்களில் ஈடுபடுவீர்கள். வேறு சிலரோடு சமூக வலைத்தளங்கள் மூலம் தொடர்புக்கொள்வீர்கள். மேலும், தினசரி காரியங்களில் ஈடுபடும்போது சில தற்செயலான பரிமாற்றங்களும் ஏற்படும்.



உங்கள் நாளின் ஒவ்வொரு பரிமாற்றத்திலும் நீங்கள் எப்படி நடத்தப்பட விரும்புகிறீர்கள்?இயேசு விரும்புவதை செய்வது என்றால் நாம் அவர்களை அவ்விதமாகவே நடத்த வேண்டும் என்று அர்த்தம். நாம் செய்ய வேண்டியதை நடைமுறையாக சிந்திக்க மீகா 6:8 மூன்று பிரிவுகளை நமக்கு கொடுக்கிறது: மற்றவர்களை வேறுபாடு இன்றி சரியாக நடத்துவது, தேவையில் உள்ளவர்களுக்கு இரக்கம் காட்டுதல், மற்றவர்களை விட நம்மை பெரியவர்களாகவும் முக்கியமானவர்களாகவும் வைக்காமல் இருப்பதன் மூலம் கர்த்தருக்கு முன் தாழ்மையுடன் வாழ்தல்.



நாம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் விசித்திரமான, வல்லமையான செயல்களை செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதாக நாம் எளிதாக நினைத்து விடலாம். அனால், மிக சாதரணமானதும், நாம் செய்யாமல் விடுவதும் கூட, சாதாரண கவனிக்கப்படாத நேரங்களில் அவர் விரும்புவதை செய்வது தான். சிறிதாயினும், தினசரி செய்யும் ஒப்புவிப்பின் செயல்கள் தான் நம்மை விசுவாதிலும் தைரியத்திலும் வளரச்செய்து, சில கடினமான காரியங்களிலும் கூட அவர் விரும்பிய படி செயல்பட நம்மை தயார் செய்கின்றன. செய்வேன் என்று சொன்ன ஒரு காரியத்தை செய்து முடிப்பது போன்ற எளிதான காரியமாக இருக்கலாம். முக்கியமாக, தியாக செயலாக அல்லது நம் சொந்த அசௌரியங்கள் மத்தியில் அப்படி செய்வதாக இருக்கலாம். 



இன்று நீங்கள் செய்ய வேண்டும் என்று தேவன் விரும்புவதை செய்ய அவரிடம் வல்லமையும் ஞானத்தையும் கேட்பீர்களா? இன்று நீங்கள் செய்யவிருக்கும் ஒவ்வொரு செயலுக்காக ஜெபியுங்கள்; அவர் நீங்கள் செய்ய விரும்புவதை செய்வதற்கு வல்லமையை கேளுங்கள்.


நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Cruக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://keithbubalo.com ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்