திட்ட விவரம்

போ, செய், சொல், கொடு: இயேசு கிறிஸ்துவினிடம் சரண் அடைவதில் உள்ள சுதந்திரம்மாதிரி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

7 ல் 3 நாள்

நான் எங்கு செல்ல நீர் சித்தமாய் இருக்கிறீரோ அங்கு நான் செல்வேன்



நாம் யாரும் எதிலும் சிக்கிக்கொள்ள விரும்புவதில்லை. நாம் ஒரு முரட்டுத்தனத்திலோ அல்லது உணர்ச்சிவசமான விஷயதிலோ சிக்கிக்கொள்வதை ஒரு மோசமான சம்பவமாக பேசுகிறோம். சிக்கி இருப்பது என்றால் எந்த இயக்கமும் வளர்ச்சியும் அங்கு இருக்காது. ஆன்மீக ரீதியிலும் இதுவே உண்மை. இதை எதிர்கொள்வோம்: அவ்வப்போது நம் ஆன்மீக பயணத்தில் நாம் சிக்கி இடைநிறுத்தப்பட்டதுபோல் அனைவருமே உணர்கிறோம். நற்செய்தி என்னவென்றால், இயேசு நம்மை எங்காவது அழைத்துச் செல்லும் பணியில் இருக்கிறார்; அவரைப் பின்தொடர்வது, நாம் இருக்க விரும்பும் இடத்திற்குச் செல்வதற்கான நோக்கமான அவருடைய நோக்கமாகும், மேலும் நாம் அவருடைய சொல் கேட்டால் நீண்ட நேரம் எங்கும் மாட்டிக்கொள்ளாமல் நம் வாழ்வில் ஒரு வளர்ச்சி இருக்கும்.



ஆதியாகமம் 12-ல் ஆபிராம் இதைச் செய்தார். தேவன் ஆபிராமுக்கு நம்பமுடியாத பயணத்தினை மேற்கொள்ளும்படி கட்டளையிடுகிறார், தேவன் தான் காண்பிக்கும் தேசத்திற்குச் செல்ல தனது நாட்டையும் குடும்பத்தையும் விட்டுவிட்டு செல்ல கட்டளையிட்டார். ஆபிராமின் விசுவாசத்தின் விளைவாக, தேவனை மகிமைப்படுத்தும் ஒரு புதிய சந்ததியாக மற்றும் மனிதகுலத்தின் இரட்சிப்புக்காக மேசியாவைக் கொண்டுவர தேவன் அவரை பயன்படுத்தினார்.



எபிரெயர் 11: 8, "விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சுதந்தரமாகப் பெறப்போகிற இடத்திற்குப் போகும்படி அழைக்கப்பட்டபோது, கீழ்ப்படிந்து, தான் போகும் இடம் இன்னதென்று அறியாமல் புறப்பட்டுப்போனான்.” என்று சொல்கிறது. நாம் எங்கு செல்ல வேண்டுமென்று தேவன் விரும்புகிறாரோ அங்கு செல்வதற்கு இறுதியில் விசுவாசத்தின் ஒரு கேள்வியில் நம்முடைய வாழ்க்கையை நிலை நிறுத்துவதில்தானிருக்கிறது. தேவனுடைய நன்மை மற்றும் இறையாண்மை திட்டத்தை நம்பியிருப்பதை அவர் நமக்கு முன்மாதிரியாகக் இங்கு காட்டினார். விசுவாசிக்க முற்படும்போது, ​​ஆபத்து மற்றும் சில நேரங்களில் பயம் நம்மை வாட்டுகிறது, ஏனென்றால் இவை ஏதிலும் நமக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. தேவனுடைய திட்டத்தில் செல்லத் தேர்ந்தெடுப்பது அந்த அச்சங்களை எதிர்கொள்ளத் தேர்ந்தெடுப்பதாகும்.



இயேசு தனது பூமிக்குரிய பணி முடிந்தவுடன், இந்த கட்டளையை தம்முடைய சீஷர்களுக்குக் கொடுத்தார்: “ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி,…” (மத்:28:19). யோவான் 17-ல் அவர் செய்த ஜெபத்தில், பிதாவிடம், “நீங்கள் என்னை உலகத்திற்கு அனுப்பியபடியே, நான் அவர்களை உலகத்திற்கு அனுப்பினேன்” என்று கூறுகிறார். நாம் எங்கு செல்ல வேண்டும் என்று இயேசு விரும்புகிறாரோ அங்கு செல்வதென்பது சீடர்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும், அதாவது, இயேசுவின் சக சீஷர்கள் போலவே. துரதிர்ஷ்டவசமாக, "சீடர்களை" உருவாக்கஒரு சிறப்பு திறமையாளராக இருக்க வேண்டும் என்றும் இயேசுவின் கட்டளையை அல்லது ஊழியத்தின் ஒரு தொழில்முறை விளக்கத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று பலர் கருதுகின்றனர். ஆனால் சீடர்களை உருவாக்குவதில் ஈடுபட நிறைய பாதைகள் உள்ளன.



இது விருந்தோம்பல் அல்லது இடைக்கால ஜெபம் போன்ற இயேசுவின் ஒவ்வொரு விசுவாசிகளுக்கான ஒரு செயலாகும். உங்கள் வாழ்க்கையை ஆவியின் கட்டுப்பாட்டிற்கு நீங்கள் உட்படுத்தும்போது, ​​மற்றவர்களை சீஷராக்குவது உட்பட, உங்கள் ஆன்மீக பயணத்தில் நீங்கள் எங்கு செல்ல வேண்டுமென்று அவர் விரும்புகிறாரோ அங்கு நீங்கள் செல்வீர்கள் என்று இயேசுவிடம் சொல்லுங்கள். யார், எப்படி என்பதை எல்லாம் அவர் உங்களை வழிநடத்தட்டும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அவருடைய வழிநடுத்துதலில் வாழுங்கள்.



இன்று நீங்கள் தேவன் உங்களை வைக்க விரும்புகிற இடத்திற்குச் செல்வீர்களா?



இயேசுவின் சக சீடராக ஒருவரை மாற்ற நீங்கள் யாரை சந்திக்க அவர் விரும்புகிறார் அவர் யாரை தேர்ந்தெடுகிறார் என்று இன்று அவரிடம் நீங்கள் கேளுங்கள்.


நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Go Do Say Give: The Freedom Of Surrender To Jesus

இயேசுவிடம் அர்ப்பணிப்பது என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் தருணம். ஆனால் இந்த தீர்மானம் எதை குறிக்கிறது மற்றும் நாம் தினந்தோறும் அதன்படி எப்படி வாழப் போகிறோம்? இது வாழ்க்கையில் நாம் எடுக்கும் பெரிய தீர்மானங்களுக்கு மட்டும்...

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Cruக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு http://keithbubalo.com ஐ பார்வையிடுங்கள்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்