உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

வாட்ச்மேன் நீ (சீனா, 1903-1972)
ஆண்டவர் நம்மை ஒரு கட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் - அது எப்படி இருக்கும் என்பதை நான் சொல்ல முடியாது, ஆனால் அவர் அதை செய்வார் - ஒரு ஆழமான மற்றும் இருண்ட அனுபவத்தில், நம் இயற்கையான பலம் தொடப்பட்டு, அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டு, இனிமேல் நம்மை நாமே நம்புவதில்லை என்ற நிலைக்கு வந்துவிடுகிறோம். சரியான இடத்தை சென்றடைய வேண்டி நம்மை கடினமான வலிமிகுந்த வழிகளில் ஊடாக வழிநடத்தி சென்று, நம்மில் சிலரை அவர் மிகவும் கடுமையாக நடத்த வேண்டியிருந்திருக்கிறது. ஆனால் இறுதியில் அவர் நம்மைப் பயன்படுத்த ஆரம்பிக்க முடிகிறது.
மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் ஒன்றன்பின் ஒன்றாக, ஒரு மணி நேரத்திற்குள் நடைபெற விரும்புகிறோம். ஆண்டவர் நம்மை நீண்ட காலத்திற்கு ஒதுக்கி வைத்திருப்பார் என்ற எண்ணத்தை நம்மால் எதிர்கொள்ள முடியாது; காத்திருக்கவும் முடியாது. அவர் எவ்வளவு காலம் எடுப்பார் என்று என்னால் சொல்ல முடியாது, ஆனால் கொள்கையளவில் இதை நான் சொல்வது மிகவும் பாதுகாப்பானது என நினைக்கிறேன், அவர் உங்களை அங்கு வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதி வரைக்கும் இருக்கும்... எல்லாமே இருட்டில், ஆனால் அது ஒரு இரவுக்கு மட்டுமே. அது ஒரு முழு இரவாக நிச்சயம் இருக்கும், ஆனால் அது அவ்வளவே. பிறகு, மகிமை வாய்ந்த உயிர்த்தெழுதலில் எல்லாம் உங்களுக்குத் திருப்பித் தரப்படுவதை நீங்கள் காண்பீர்கள்; அப்போதைக்கும், முன்னிருந்ததற்கும் உள்ள வித்தியாசத்தை அளவிட முடியாது!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்