உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

லெந்து என்பது என்ன?
சில கிறிஸ்தவர்களுக்கு லெந்து என்பது அவர்களது ஆத்மீக வாழ்வின் பகுதியாகிறது; ஆனால் பிறருக்கோ அது அறிமுகமானதே அல்ல. உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டருக்கு முன்னதாக தங்கள் இருதயங்களை ஜெபத்துடன் ஆராய்ந்து சீர்தூக்கி ஆயத்தப்படுத்தும் காலத்தையே லெந்து என்று தொன்றுதொட்டு கிறிஸ்தவர்கள் அநுசரித்து வந்திருக்கிறார்கள். லெந்து காலம் என்பது சாம்பல் புதனன்று துவங்கி பெரிய வெள்ளிக்கிழமையும் புனித சனிக்கிழமை வரையிலான நாற்பது நாட்கள் ஆகும்; இதில் ஞாயிற்றுக்கிழமைகள் அடங்காது. எல்லா ஞாயிற்றுக்கிழமைகளுமே இயேசுவின் உயிர்த்தெழுதலை நாம் கொண்டாடுவதால் இந்த நாற்பது நாட்களில் வரும் ஆறு ஞாயிற்றுக்கிழமைகளும் அடங்குவதில்லை; ஏனென்றால் லெந்து என்பது நம்மை மனஸ்தாபத்துடன் ஆராய்ந்து, மனதை ஒருமுகப்படுத்தும் காலமாகும். பல கிறிஸ்தவர்கள் லெந்து காலம் முழுவதையும் உபவாசத்தில் செலவழிப்பார்கள். ஆனால், இத்தகைய காரியங்களை விலக்குவதைக் காட்டிலும், உலகத்தில் நம்மைக்குறித்த கர்த்தரின் சித்தத்துக்கு நம்மை அர்ப்பணிப்பதே சாலச்சிறந்ததாகும்.கிறிஸ்தவ சபை ஒழுங்கில் லெந்து காலம் ஒரு முக்கியமான காலமாகும். கிறிஸ்தவ சபையின் வருடமானது நமது கவனத்தைக் கர்த்தரிடம் ஒருமுகப்படுத்தி நம் நேரத்தை சரிவர செலவழிக்க உதவுகிறது. நமக்கு பரிவர்த்தமான சூரியன் சார்ந்த காலண்டரைக் காட்டிலும் கிறிஸ்தவ சபையின் வருடமானது கர்த்தரை சார்ந்து இவ்வுலகில் அவருடைய செயல்பாடுகளை நடத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்தவ காலண்டர் வருடமானது ஆறு வித காலங்களாக பிரிக்கப் பட்டுள்ளது: கிறிஸ்துவின் வருகையாகிய அட்வெந்து, கிறிஸ்துவின் பிறப்பாகிய கிறிஸ்துமஸ், கிறிஸ்து புறஜாதியாருக்கு வெளிப்பட்ட பிரசன்ன காலம், தபசு என்னும் லெந்து காலம், உயிர்த்தெழுந்த திருநாளாகிய ஈஸ்டர், மற்றும் பரிசுத்த ஆவியின் திருநாளாகிய பெந்தேகொஸ்து. இவை ஒவ்வொன்றும் வெவ்வேறு விஷயங்களுக்கு நம் கவனத்தை ஈர்க்கின்றன: அட்வெந்து காலமானது, ஜனனம் மற்றும் இரண்டாம் வருகையுமாகிய நமது கர்த்தரின் இரண்டு வருகைகளையும் எதிர்பார்த்தலைக் குறித்தது. கிறிஸ்துவின் பிறப்பாகிய கிறிஸ்துமஸ் இயேசு கிறிஸ்துவின் ஜனனத்தைக் குறித்தது. கிறிஸ்து புறஜாதியாருக்கு வெளிப்பட்ட பிரசன்ன காலமானது கர்த்தரின் வெளிச்சம் உலகில் பிரகாசிப்பதைக் குறித்தது. தபசு என்னும் லெந்து காலமானது மனிதகுலத்தின் பாவத்தையும் கர்த்தரின் பெரிதான கிருபையால் விடுதலையாவதையும் குறித்தது. உயிர்த்தெழுந்த திருநாளாகிய ஈஸ்டர் மறுவாழ்வின் ஜீவனைப் பற்றியது. பரிசுத்த ஆவியின் திருநாளாகிய பெந்தேகொஸ்து இவ்வுலகில் தொடந்து செயல்பட்டு வரும் பரிசுத்த ஆவியானவரைக் குறித்தது. வருடா வருடம் சீரொழுங்காக மாறி மாறி வரும் இந்த காலங்கள் ஒருவரைத் தமது தனிப்பட்ட வாழ்விலும் சமுதாய வாழ்விலும் ஆன்மீக வளர்ச்சியடையச் செய்யும்.உங்களுக்கு இந்த லெந்து கால சிந்தனைகள் பிரியமானதாக இருந்தால், Mosaic என்ற பரிசுத்த வேதாகமப்புத்தகத்தை கருதிப்பாருங்கள், இதில் வண்ண வரைபடங்களும் வாசிப்பு பகுதிகளும் சபை வருடத்தின் ஒவ்வொரு வாரத்துக்கும் தியானத்துடன் கொடுக்கப் பட்டுள்ளது.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்