உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 36 நாள்

நோக்கத்துடனான உபவாசம் (க்ளைட் டேபர்)

உபவாசம் என்ற வார்த்தை நம் காதுகளுக்கு அந்நியமாய் தொனிக்கிறது. நாம் கேட்ட மாத்திரத்தில், சுருங்கி, தயங்கி அதை தள்ளி விடுகிறோம். வழியில் குற்றுயிராய் கிடந்த வழிப்போக்கனை கண்டும் காணாததை போல ஒதுங்கி சென்ற ஆசாரியனைப் போலவே நாமும் உபவாசத்தை ஒதுக்குகிறோம். ஆனால், உபவாசம் ஆதிதிருச்சபையின் காலகட்டத்திலே, வாழ்க்கையோடு பின்னி பிணைபட்ட ஒரு அங்கமாய் இருந்தது.

இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டின் உடன்படிக்கையின் உபவாசத்தை உறுதியாய் ஆரத்தழுவி ஏற்றுக்கொண்டார். "ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது" (மத்தேயு 6:2), "நீ ஜெபம்பண்ணும்போது" (மத்தேயு 6:5), "நீங்கள் உபவாசிக்கும்போது" (மத்தேயு 6:16) என்று மலைமீது போதித்தார். இயேசு கிறிஸ்து தானம், ஜெபம், உபவாசம் ஆகியவைகளை ஆவிக்குரிய வாழ்க்கையின் இயல்பான விஷயங்களாக கருதினார். இவைகள் வேண்டாமென்றால் விட்டுவிடுகிற காரியங்களாய் அல்லாமல், கிறிஸ்து கற்றுகொடுத்தவைகளிலேயே பிரதான பாடமாய் விளங்கிற்று.

மனித வாழ்க்கை வரலாற்றின் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கு முன்னரும், உபவாசம் பின் இருப்பதை காணலாம். மோசே உபவாசம் இருந்தபின்னரே பத்து கட்டளைகளின் பலகையைப் பெற்றதையும், பாவத்தை பற்றின புது அறிவையும், உலகம் எதை சரியென்று என்று சொல்கிறது என்பதையும் காணலாம். அவர் இரவும் பகலும் நாற்பது நாள் உபவாசமாயிருந்தபின்பு (மத்தேயு 4:2). ஆதிதிருச்சபையின் தலைவர்கள் உபவாசித்தபின், இயேசுவின் நற்செய்தி பாலஸ்தினியத்தையும் தாண்டி பரவிற்று (அப்போஸ்தலர் 13:2). இருபதாம் நூற்றாண்டின் தலைவர்கள் உபவாசித்ததால்தான், இயேசுவின் நற்செய்தி கட்டுக்கடங்காமல் பரவிக்கொண்டிருக்கிறது. சுத்த இருதயத்தோடு உபவாசிப்பவர்களுக்கு பலனளிக்க பிதா பிரியமாய் உள்ளார் (மத்தேயு 6:18).

உபவாசம் அதன் பலனுக்கு முன்செல்கிறது. நாம் உபவாசிக்கும்போது அந்த நேரத்தை, சில காரியங்களை கைஎடுப்பதற்காக ஒதுக்கப்பட்ட நேரமாக கருத வேண்டும். கிறிஸ்துவையும் அவரது ராஜ்ஜியத்தையும் குறித்து தியானிக்கும் வண்ணமாக உணவை ஒரு சில மணி நேரங்கள் தவிர்க்கவேண்டும். உபவாசிப்பதற்க்கு தீர்மானமும் அர்ப்பணிப்பும் மிகவும் அவசியம். நம் ஓய்வில்லாத அன்றாட வாழ்க்கையின் நடுவே, உபவாசிப்பதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். உபவாசிக்கும்போது, மாம்சத்தில் அல்லாமல், ஆவிக்குள் தேடி, வருந்தி, விதைப்போமேயானால், அது மிகுந்த பலன் தரும். நாம் உணவை உட்கொள்ளும்போது மாம்சத்தை திருப்திப்படுத்துகிறோம். நாம் உபவாசிக்கும்போது மாம்சத்தையும் தாண்டி, பரிசுத்த ஆவிக்குள் ஐக்கியமாகிவிடுகிறோம்.
உபவாசத்தின் கனிகள் உடனே கிடைப்பதில்லை. அந்த ஒழுக்கத்தைத் தொடர்ந்து பல காலம் பயில்வதின் மூலமாகவும், மற்றும் அனுபவத்தின் மூலமாகவும் மட்டுமே கிடைக்கும். உபவாச காலங்களில் ஆண்டவர் நமக்கு கிருபை அளிக்கிறார். உபவாசத்தை தொடங்கிய அந்த க்ஷணம் நாம் மரித்து விடுவோமோ என்ற எண்ணம் தோன்றும் அதே நேரம் உணவில்லா அந்த காலகட்டத்தை, ஜீவனாகவும், ஒளியாகவும் பகுத்தறிய செய்கிறார்.

இயேசு கிறிஸ்து, திடமனதாய் எருசலேம் பட்டணத்திற்குள் பிரவேசிக்கும்போது, நாமும் "உபவாசித்தால்" என்றல்லாமல், "நீங்கள் உபவாசிக்கும்போது" என்ற ஒழுக்கத்தை கடைபிடித்து அவரை பின்தொடர்வோம்

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்