உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 35 நாள்

டிடாச்சே( பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் போதணைகள், ஏறத்தாழ கி.பி 90)

ஆனால் கபடதாரிகளோடு நீங்கள் உபவாசிக்க வேண்டாம் , ஏனென்றால் அவர்கள் வாரத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது கிழமைகளில் உபவாசிக்கிறார்கள்;ஆனால் நீங்கள் நான்காவது மற்றும் ஆயத்த நாளிலும்(வெள்ளிக்கிழமை) உபவாசியுங்கள். கபடதாரிகளை போல ஜெபிக்கவும் வேண்டாம், ஆனால் ஆண்டவர் சுவிசேஷத்தில் கட்டளையிட்டது போல நீங்கள் ஜெபம்பண்ணவேண்டிய விதமாவது; பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே, உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக. உம்முடைய ராஜ்யம் வருவதாக. உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக.
எங்களுக்கு வேண்டிய(தேவையான) ஆகாரத்தை இன்று எங்களுக்குத் தாரும்.எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.
ஒரு நாளைக்கு மூன்று முறை இவ்வாறாக ஜெபியுங்கள்.

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்