உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

பண்டித ராமாபாய் (இந்தியா, 1858-1922)
சில ஆண்டுகளுக்கு முன்னர் எனது திடநம்பிக்கை அறிவுசார்ந்தது மட்டுமே என்று உணர்த்தப்பட்டேன் - என் திடநம்பிக்கை ஜீவனற்ற ஒன்று என்று. அது மரணத்திற்குப் பின் நடக்கவிருக்கும் வருங்கால இரட்சிப்பைக் குறித்ததானதால் என் ஆத்துமா "மரணத்திலிருந்து ஜீவனை வந்தடையவில்லை." என் நிலைமை எவ்வளவு ஆபத்தானது என்றும், நான் எத்தகைய பரிதபிக்கத் தக்க பாவி என்றும், எனக்கு இம்மையில் இரட்சிப்பு தேவை என்றும், அது வருங்காலத்துக்குரியதல்ல என்றும் கர்த்தர் காண்பித்தார். நான் மிகவும் மனஸ்தாபப்பட்டு, வெகு நாட்களாக இரவிலும் தூக்கமின்றி, மன அமைதலின்றி நோயுற்றிருந்தேன். நான் உடனடியாக இரட்சிப்படையாமல் இளைப்பாற முடியாதபடி பரிசுத்த ஆவியானவர் என்னை ஆட்கொண்டார். அதனால் நான் மனமார்ந்து என் பாவங்களை கிறிஸ்து இயேசுவின் நாமத்தினால் மன்னித்தருளும்படி மன்றாடி ஜெபித்தேன். நான் உண்மையாகவே அவர் மூலம் இரட்சிப்படைந்து விட்டேன் என்று என்னை உணர வைக்கும்படியும் கெஞ்சினேன். நான் கர்த்தரின் வாக்குத்தத்தை முழுவதுமாக நம்பினேன். அப்படி செய்தவுடனே நான் பாவ மன்னிப்பு பெற்றதையும் பாவத்தின் வல்லமையிலிருந்து விடுதலையாவதையும் உணர்ந்தேன்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்