உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

பாவத்தின் வாசனை (தீமோத்தி G. வால்டன்)
ஒரு பழங்கால அமெரிக்க உபதேசியார் ஊர் ஊராக சுவிசேஷத்தை பிரசங்கித்து வந்தார். அவர் ஒரு ஊரின் எல்லைப் பகுதியை அடையும் போது சிறிது நிறுத்தி 'நான் நரகத்தை உணர்கிறேன்' என்று கூறுவார்! நாம் அதை உணரும் நிலையில் இருந்தால் உலகத்தை நாம் நரகம் போல நுகர்வோமா? இது இந்தக்காலகட்டத்தில் முழுக்க முழுக்க அன்னியமான கருத்து. ஆனாலும் இந்த விசித்திரமான வாசனையானது ஆதாம் ஏவாளுடைய பாவத்தினால் இன்றும் இவ்வுலகை துளைக்கிறது.பாவத்தைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? பாவத்தை கையாளுவதில் மக்கள் பல வித நூதன வழிகளை வைத்திருக்கிறார்கள். அவர்கள் மறுக்கிறார்கள். அவர்கள் அதை குறைவுபடுத்துகிறார்கள். அவர்கள் அதற்கு சாக்குப் போக்கு சொல்கிறார்கள். அவர்கள் அதற்காக பிறரை குற்றப்படுத்துகிறார்கள். ஜேம்ஸ் துர்பர் எழுதிய பதின்மூன்று கடிகாரங்கள் என்ற கற்பனைக்கதையில் டியூக் என்ற கதாபாத்திரம், "நம் அனைவருக்குமே சிறு சிறு பலவீனங்கள் உண்டு; நான் பொல்லாதவனாய் இருப்பது எனது பலவீனம்." என்று ஒத்துக்கொள்கிறான்.
பாவம் ஏன் பாவமாகிறது? பாவத்தை பாவம் என்று யார் சொல்கிறார்கள்? பாவத்தை பாவம் என்று சொல்வதே ஒரு தரத்தை நிலைநாட்டுகிறது. உன்னை உச்ச வேக தவறுக்காக அதிகாரி ஒருவர் நிறுத்தினால், அது, அரசாங்கம் ஒரு வேக கட்டுப்பாட்டை நியமித்து அதற்கான அறிவிப்புக்குறியிட்டும் நீ அதனை மீறி விட்டாய் என்பதே பொருள். அனைத்து மனிதகுலத்துக்கும் உரிய ஒழுக்கத்தின் தரம் கர்த்தரின் பரிசுத்தம் என்ற குணத்திலிருந்தேவருகிறது.இந்த உலகம் பாவ வாசனை மட்டுமல்லாது மரண வாசனையும் வீசுகிறது. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதாகமம் கூறுகிறது. பாவமானது மரணத்துக்கு வழிவகுக்கிறது, அந்தத் தோட்டத்தில் மரணம் இருந்தது. ஆதாமும் ஏவாளும் விலக்கப்பட்ட கனியைப் புசித்த மாத்திரத்தில் செத்து மடியவில்லை, ஆனால் இரண்டு காரியங்கள் உடனே நடந்தன: மாம்சத்தின் அழிவின் வித்து அவர்களுக்குள் விதைக்கப் பட்டது. என்றும் இளமையாய் வாழ படைக்கப்பட்ட பழுதற்ற இரு நபர்கள் வயதாகி மரிக்க ஆரம்பித்தனர். ஆவிக்குரிய மரணமும் அடைந்தார்கள். கர்த்தருடனான அந்நியோன்னிய ஐக்கியமும் முறிந்தது. ஆதியாகமம் 3ல் பார்க்கிறபடி ஆதாமும் ஏவாளும் கர்த்தரிடமிருந்து புதருக்குள்ளாக ஒளிந்து கொண்டார்கள். கர்த்தர் ஏதாவது ஒரு வீரமிக்க செயலினால் அவர்களை விடுவித்து தம்முடன் ஆரோக்கியமான உறவுக்குள் திரும்பக் கொண்டு வருவதே அவர்களது நம்பிக்கையாய் இருந்தது, அவர்கள் இதை அப்போது உணரவில்லை. கர்த்தர் இரண்டு விலங்குகளைக் கொன்று இரட்சகர் இயேசுவின் வருகையைக் குறித்து (ஆதியாகமம் 3:15) அறிவித்த போது இதையே குறிப்பிட்டார்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்