உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

ஒருபுறம் பரிசுத்தத்தை பற்றி பேசும்போது, மறுபுறம் அவருடைய ஆதரவு இந்த எதிர்ப்பை மேற்கொண்டு அழித்துவிடுகிறது என்று சிந்தித்துக் கொள்கிறோம்.கிருபை என்று கூறும்போது பாவத்திலிருந்து மன்னிப்பு என்றும், பரிசுத்தம் எனும்போது பாவத்தின் மீதான நியாய தீர்ப்பு என்றும் கூறலாம். ஆனால் இவை இரண்டுமே ஆண்டவரின் அன்பை பிரதிபலிக்கும் போது, நியாய தீர்ப்பு இல்லா மன்னிப்பும், மன்னிப்பு இல்லா நியாய தீர்ப்பும் , ஒன்றில்லாமல் இன்னொன்று இருத்தல் ஆகாது.எங்கே ஆண்டவருடைய அன்பு இதுவரை கண்டறியப்படவில்லையோ, அல்லது இனி நம்பப்படபோவதில்லையோ, அங்கு மேன்மைக்கு பதில் பிரிவினையே இருக்கும். ஆனால் இந்த இடத்தில், சுருக்கமாய் மன்னிப்பு என்றால் அது பாவத்திலிருந்துதான்மன்னிப்பு என்றும்,நியாய தீர்ப்பு என்றால் அது ஆக்கினையிலிருந்துதான் நியாய தீர்ப்பு என்றும் யூகித்துக்கொள்ளலாம். ஒரு வழக்கில் ஆண்டவர் நியாய தீர்ப்பையும், மற்றொன்றில் மன்னிக்கிறார் என்று கிடையாது.ஆண்டவருடைய வெளிச்சத்திலும் அவருடைய அன்பிற்குள்ளாகவும் நாம் விசுவாச அறிக்கையிட்டோமானால்,அதையே ஆண்டவருடைய மன்னிப்பிற்கும் நியாய தீர்ப்பிற்கும் செய்வோமானால் இதை வேறுப்படுத்துகிற நுண்ணறிவு வளரும். அனால் ஆண்டவருடைய கிருபையையும் பரிசுத்தத்தையும் ஒரு போதும் நிச்சயமாய் பிரிக்கக்கூடாது.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்