உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

Devotions for Lent from Holy Bible: Mosaic

46 ல் 22 நாள்

பரிசுத்த கர்த்தர் (கெயித் பாட்டர்)

இந்த லெந்து காலத்தில் இயேசு செய்த மகத்தான தியாகம் மற்றும் தமது ஜீவனைக் கொடுத்து வாங்கின பாவமன்னிப்பைக் குறித்து நினைவுகூருகின்றோம். நம்முடைய பாவங்களே நமக்கும் ஆண்டவருக்கும் உள்ள உறவின் நடுவே வந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்கிறோம்.

எனினும், நம் ஆண்டவர் பெரியவரும் பரிசுத்தமானவருமானவர் என்பதை நாம் புரிந்து்கொள்ளாதவரை நமது பாவ அறிக்கை கனமற்றதாகவும் ஆழமற்றதாகவுமே இருக்கும். நாம் தொடர்ந்தேச்சியாக, பாவத்தையும் அதன் விளைவுகளின் தீவிரத்தையும் குறைத்து மதிப்பிடுவதன் மூலம், ஆண்டவரை ஒத்திராமல், அவருடன் ஐக்கியப்படும் தகுதியையும் இழந்து விடுகிறோம். கர்த்தருடைய கிருபை இயேசு கிறிஸ்துவின் மூலம் நம்மை முழுவதுமாக சுற்றி மூடியிருப்பதால் நாம் கர்த்தர் முன்பாக நாம் நீதிபரர்களாக அவருடைய ஐக்கியத்துக்கு பாத்திரராக ஆக்குகிறது. இதை நாம் புரிந்து கொள்ளவில்லையென்றால் மற்றவரையும் நம்மையும் மன்னிக்க நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்துமே கனமற்றதாகவும் ஆழமற்றதாகவுமே இருக்கும்.

ஆதலால் இந்த காலங்களில் நாம் கர்த்தரின் பரிசுத்தத்தை தியானித்து அன்பான நோக்கத்தாலும் ஆரோக்கியமான ஊக்கத்தாலும் நிறைந்திருப்பது எப்படி என்று சிந்திப்போம்.

ஏசாயா 6ல், இந்த பெரிய தீர்க்கத்தரிசியின் நிகழ்ச்சித்தொடரானது, தூதர்கள் மத்தியில் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ஆண்டவருடைய பிரம்மாண்டமான தரிசனத்தோடு துவங்குகிறது. இரவும் பகலும் சேராபீன்கள் கூப்பிட்டு சொல்வது: " சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் , பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது!" (ஏசாயா 6:3) ஏசாயாவின் பதில்குறிப்பு என்ன? "எல்லாம் முடிந்தது! ஐயோ! அதமானேன், ஏனென்றால் நான் ஒரு பாவியான மனுஷன். நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன், அசுத்த உதடுகளுள்ள ஜனங்களின் நடுவில் வாசமாயிருக்கிறவன்; ஆயினும் சேனைகளின் கர்த்தராகிய ராஜாவை என் கண்கள் கண்டதே." (ஏசாயா 6:5)

கர்த்தரைக் கண்டதனால் ஏசாயா தன்னையே காணும் கண்களைப் பெற்றான். அசுத்தம். சுற்றுப்புற அசிங்கத்தினால் பாதிக்கப் பட்ட நிலைமை பரிசுத்தத்தைத் தவிர மற்ற எல்லாமே உண்டு. அதனால் ஆண்டவர் ஏசாயாவைத் தொட்டார். அவன் பாவமன்னிப்பையும் சுத்திகரிப்பையும் ஒரு புதிய ஆயத்தத்தையும் அனுபவிக்கிறான். கர்த்தர் ஒரு மனித முகவரை அழைக்கிறார். ஏசாய பதிலளிக்கிறார், " இதோ, அடியேன் போகிறேன்! என்னை அனுப்பும்."

இது நம் கதையாகவும் இருக்கலாம். கர்த்தரின் பரிசுத்த வெளிச்சத்தில்,நாம் அதமாகிறோம். "எனக்கு ஐயோ! நான் அசுத்தர்களின் மத்தியில் வசிக்கும் ஒரு அசுத்தன். நான் உம்மை இப்போது உண்மையாகவே பார்த்தபடியால் என்னைப் பார்க்கிறேன். உதவும்!" கர்த்தர் நம் பாவத்தை விட மிகவும் பெரிதான கிருபையினால் நிச்சயமாக உதவுகிறார். அவரது பரிசுத்தம் பெரியது, அதிலும் மேலானது அவரது கிருபை. ஏனென்றால் அவரது பரிசுத்தத்தைக் குலைக்கும் நம் பாவத்தை கிருபை மூடுகிறது. "என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக." (சங்கீதம் 34:3).

வேதவசனங்கள்

இந்த திட்டத்தைப் பற்றி

Devotions for Lent from Holy Bible: Mosaic

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்

More

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்