உயிர்த்தெழுதல் உபவாசக்கால (லென்ட்) த்திற்கான பரிசுத்த வேதாகம தியானப்பகுதி:மாதிரி

டியற்றிச் போன்ஹோபரின் ஜெபம் (ஜெர்மனி, 1906-1945)
கர்த்தாவே, அதிகாலையில் உம்மிடம் மன்றாடுகிறேன். என் நினைவுகளை உம்மிடமாக ஒருமுகப்படுத்தி ஜெபிக்க உதவி செய்யும். இது என்னால் முடியாத காரியம்.
என்னில் இருள் உள்ளது, ஆனால் உம்மிடம் வெளிச்சம் உள்ளது; நான் தனிமையில் இருக்கிறேன், ஆனால் நீர் என்னைக் கைவிடாதிரும்; என் இருதயம் பலவீனமானது, ஆனால் உம்மிடம் உதவி உள்ளது; நான் அமைதியற்றிருக்கிறேன், ஆனால் உம்மிடம் சமாதானம் உண்டு. என்னிடம் கசப்புணர்வு உள்ளது, ஆனால் உம்மிடம் பொறுமை உள்ளது; உமது வழிகள் எனக்குப் புரியவில்லை,ஆனால் நீர் என் வழியை அறிந்திருக்கிறீர்....
என்னை விடுவியும், உமக்கு முன்பாகவும் மனிதருக்கு முன்பாகவும் நான் பதிலளிக்கத் தக்கதாக நான் வாழக் கிருபை செய்யும். கர்த்தாவே, இன்றைக்கு எது நடந்தாலும், உம் நாமம் மாத்திரம் கனப்படுவதாக.
ஆமென்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான 46நாள் தியானப்பகுதியில் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிப்பதற்கு ஏதுவான வசனங்கள், தியானம் அடங்கிய தினசரி பகுதி. உயிர்த்தெழுதல் குறித்து நீங்கள் அறிந்து இருந்தாலும், இல்லாவிட்டாலும்,இந்த தியானப்பகுதி,கிறிஸ்து இயேசுவைக்குறித்த உங்களுடைய புரிதலை ஆழப்படுத்தும். உலகிலுள்ள கிறிஸ்துவ மக்களோடும், சபையோடும் இயேசு கிறிஸ்துவைக்குறித்து தியானிக்க எங்களோடு வருமாறு உங்களை அழைக்கிறோம்
More
உயிர்த்தெழுதல் பண்டிகைக்காலத்திற்கான வேதாகம தியானப்பகுதிகளை அளித்த டின்டேல் ஹவுஸ் பதிப்பகத்தினருக்கு எங்களுடைய நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். வேதாகமம் பற்றி மேலும் அறிய www.tyndale.com/p/holy-bible-mosaic-nlt/9781414322056 இணையதளத்தைப்பார்க்கவும்